கடத்தல் தங்கம் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பா?

Get real time updates directly on you device, subscribe now.

கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் வந்த பார்சலில் சுமார் 35 கிலோ கடத்தல் தங்கத்தை கைப்பற்றினர். இந்த கடத்தல் தங்கத்தின் பின்னணியில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்வப்னா சுரேஷ் தற்போது தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் கடத்தல் தங்கத்தில் பிண்ணனியில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு வேண்டப்பட்டவர் என்றும் ஸ்வப்னா சுரேஷை காப்பாற்றவும் அவரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும் கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தை கேரள காங்கிரஸ் கட்சி பிரதானமாக கையில் எடுத்துள்ளது. தங்க கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷை காப்பாற்ற முதல்வர் அலுவலகம் முயற்சி செய்ததை முதல்வர் பிணராயி விஜயன் மறுக்க முடியாது என்று கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார்.

 

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More