IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் கைது! விடிய விடிய விசாரணை

Get real time updates directly on you device, subscribe now.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து கேரளாவில் உள்ள ஐக்கிய அரசு அமீரக துணை தூதரக முகவரிக்கு ஜுன் 3ம் தேதி சரக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்துள்ளது. தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அதிகாரிகள் சோதனையிட காத்துக் கொண்டிருந்தனர்.

சோதனையில் அந்த பார்சலில் உருளை வடிவில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி அடையாள அட்டையுடன் அந்த பார்சலை பெற வந்த சரித் என்பவரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

சிக்கிய நபர், தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த சரித் என்பவரும், அலுவலக முறைகேட்டில் ஈடுபட்டதாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட பின்பும், தூதரகத்தின் பெயரைச் சொல்லி சரித் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டுவந்த முக்கிய நபரான முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், பெங்களூருவில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் நேற்று கொச்சி அழைத்து வரப்பட்டு விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷை இன்று கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என தெரியவருகிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader