IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஒரே நபரால் 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரனோ பாதிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரனோ வைரஸ் தொற்று இந்தியாவில் முதலில் கேரளாவில் அதிகமாக பரவ ஆரம்பித்தது. கேரளாவில் தற்போது கொரனோ வேகமாக பரவி வருகிறது. ஒருவர் 20 நிமிடத்தில் 4 பேருக்கு பரப்பி இருப்பது அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

கேரளாவில் உள்ள காசர்கோடில் கொரனோ பாதிப்பு அதிகளவு இருக்கிறது. ஏராளமான மக்கள் கொரனோ அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காசர்கோடு ஆட்சியர் தெரிவிக்கையில், ஒரு கொரனோ நோயாளியிடம் இருந்து 4 பேருக்கு வைரஸ் பரவி இருக்கிறது.

அவருக்கு மார்ச் 16ம் தேதி கொரனோ உறுதி செய்யப்பட்டது. முன்னதாக ரத்த மாதிரிகளை மருத்துவமனையில் கொடுத்துவிட்டு வீடு சென்றுள்ளார். அப்போது தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால், மருத்துவமனையில் தனி வார்டில் சேர்க்கப்படும் முன்பே மனைவி, குழந்தை, தாய் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். அவர்களுக்கும் கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளது. அவரை விமான நிலையத்தில் இருந்து காரில் அழைத்து வந்த நண்பருக்கும் கொரனோ பாதிப்பு இருக்கிறது. அனைவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.

இதேபோன்று துபாயில் இருந்து திரும்பி வந்த 47 வயது நபர், மூலம் 4 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

அதற்கு காரணம் அவர் பல்வேறு கிளப்கள், 3 திருமணங்கள், கண்ணணூரில் ஒரு இறுதிச் சடங்கு, பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். காசர்கோடு மாவட்டத்தில் 77 கொரனோ பாதிப்பு மாதிரிகளில் வந்துள்ளன. அதன் முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader