IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் நவ.25 இல் சுவாதி பூஜை

296


திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வரும் நவ.25 ஆம் தேதி சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
தெட்சிணா அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1100 ஆண்டுகள் பழமையானதாகும்.

இக்கோயில் கல்வெட்டில் பெருமாளின் திருப்பெயர் முனையெதிர் மோகர் விண்ணகர் (போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பமுடையவர்) என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாமும் தொடர்ந்து சுவாதி நட்சத்திர ஆராதனையில் கலந்து கொண்டோமானால் எல்லாவித சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு எதிரிகளின் தொல்லைகள் நீங்கி உன்னத நிலையை அடையலாம்.

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த மாதம் வரும் நவ.25 ஆம் தேதி (திங்கள்கிழமை) சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தொடர்ந்து 12 வகையான பொருட்களால் அபிசேகங்கள் நடைபெறுகிறது.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம், தீபாராதனை நடக்கிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்யலட்சுமி நரசிம்மபீடத்தினர், நரசிம்மசுவாமி கைங்கர்ய சபையினர் செய்து வருகின்றனர்.