IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வாயை மூடி இருங்கள்! அதிபர் டிரம்பிற்கு அமெரிக்க காவல்துறை தலைவர் எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்திலுள்ள மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் கடும் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்துவருகின்றன.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு காவல் துறை திணறி வருகிறது. இதனிடையே ஜூன் 1 ம் தேதி மாகாண ஆளுநர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் , நீங்கள் ஆதிக்கம் செலுத்தாவிட்டால் , நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம் என்றார்.

இந்நிலையில், இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் ஹூஸ்டன் காவல் துறைத் தலைவர் ஆர்ட் அஸ்வோடோ, சிஎன்என் செய்தி ஊடகத்திடம் பேசுகையில், “இந்த நாட்டின் காவல் துறைத் தலைவர்கள் சார்பாக அமெரிக்க அதிபருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களிடம் ஆக்கப்பூர்வமாகச் செய்ய ஏதும் இல்லையென்றால் , வாயை மூடி இருங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader