IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் ஜன.24 இல் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம்

Get real time updates directly on you device, subscribe now.

 

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது. நவக்ரஹ தோ~ங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த மகா சூலினி துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது. இம்மாதத்திற்கான ஹோமம் வரும் ஜன.24 (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணி முதல் நடைபெறுகிறது. முன்னதாக 6.30 மணிக்கு சங்கல்பம் நடைபெறும்.

ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஸ்ரீமகா சூலினி துர்க்கா ஹோமத்தில் கலந்து கொண்டால் நவக்ரஹ தோ~ங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து நிவர்த்தி ஏற்படும் என சூலினி தந்த்ர சாஸ்த்ரம் கூறுகிறது.

அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் அன்றைய தினம் பூமியில் மிக அபூர்வமான சக்திகள் கிடைக்கின்றது. ஆதலால் அன்று செய்யும் ஜபங்கள், ஹோமங்கள், பல ஆயிரம் மடங்கு பலன்களை கொடுக்கிறது என மந்த்ர சாஸ்திரங்கள் கூறுகின்றது. எனவே நாம் தொடர்ந்து அமாவாசை மகா சூலினி துர்க்கா ஹோமங்கள் கலந்து கொண்டு, மேன்மையடையலாம் என பீடத்தினர் தெரிவித்துள்ளனர்.

#Keelapavoor #Srimakasoolini #Durga #Homam #Jan24 #Lakshmi #Narasimha #pidam

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More