IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் ஜன.6 இல் வைகுண்ட ஏகாதசி விழா 

Get real time updates directly on you device, subscribe now.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் நரசிம்மர்  கோயிலில் ஜன.6 இல் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டை டிச.27 முதல் ஜன.16ந்தேதி வரை 21 நாட்கள் தினந்தோறும் மாலை  6-15மணிக்கு பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

வைகுண்ட ஏகாதசி தினமான ஜன.6 (திங்கள்கிழமை) காலை 5-45 மணிக்கு ஸஸ்ரீPராமநாம பஜனை, 10-30 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம் தொடந்து அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பரம பத வாசல் திறப்பும், 5-45 மணிக்கு கோயிலின் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளத்தில்) 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றுதல் நடைபெறும். தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல் நடக்கிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்து வருகின்றனர்.

#Keelapavoor #Narasimhar #Temple #Vaikunda #Ekadasi #Jan6

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader