IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஷ்மீர் விவகாரத்தில் வேறுநாடு தலையிட அனுமதிப்பதில்லை! ஜி7 மாநாட்டில் மோடி அதிரடி!!

0

காஷ்மீர் விவகாரத்தில் வேறுநாடு தலையிட அனுமதிப்பதில்லை என்று பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் அதிரடியாக தெரிவித்தார். பிரதமரின் இந்த துணிச்சலான பேச்சினை பலரும் வரவேற்றுள்ளனர்.


பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரான்சு, அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கடந்த 22ம்தேதி புறப்பட்ட அவர், பிரான்சில் முதற்கட்ட நிகழ்ச்சிகளையும், அமீரக பயணத்தையும் முடித்து விட்டு பஹ்ரைன் சென்றார். இந்த அரபு தேசத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்ற பெருமையுடன் அங்குள்ள கிருஷணர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


பஹ்ரைனில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்த பிரதமர் மோடி நேற்று மீண்டும் பிரான்சு புறப்பட்டு சென்றார். அங்கு இன்று நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசினார். சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் தொடர்பான அமர்வுகளில் பிரதமர் மோடி பேசினார்.


இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றார். காஷ்மீர் பிரச்சினை குறித்து மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் கருத்து தெரிவித்து வந்த நிலையில் பிரதமர் மோடி, டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். பின்னர் மாநாட்டில் பேடிய மோடி, காஷ்மீர் விவகாரத்தில் வேறுநாடு தலையிட அனுமதிப்பதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்