IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கணவனின் சந்தேகம் மனைவியின் உயிரை பறித்த பரிதாபம்!!

Get real time updates directly on you device, subscribe now.

கூலி தொழிலாளி ஒருவர் மனைவியை சந்தேகப்பட்டு 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி டவுன் ஹொச படாவனே பகுதியில் வசித்து வந்தவர் செரீப். அவரது மனைவி ஜீபைதா. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதியர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செரீப் மடிகேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் செரீப்புக்கு தனது மனைவி ஜீபைதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக செரீப் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் இரவு செரீப் ஜீபைதாவிடம் தகராரு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே கடும் வாக்கு வாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.

பின்னர் இருவரும் வீட்டில் படுத்து தூங்கி விட்டனர். இந்நிலையில் திடீரென எழுந்த செரீப் நள்ளிரவில் தனது மனைவி ஜீபைதா மீதான ஆத்திரத்தில் கத்தியை எடுத்து ஜீபைதாவை 30 முறை சரமாரியாக குத்தினார். மேலும் ஆத்திரம் தாங்காமல் கழுத்தையும் நெரித்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஜீபைதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செரீப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் ஜீபைதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலை செய்த செரீப்பை கைது செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader