IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தொழிலாளியை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள்

64

துணி தைக்கும் தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் துணி தைக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி சின்னப்பொண்ணு. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் செல்வராஜ் காரைக்குடி செஞ்சை பள்ளி வாசல் அருகே உள்ள புளியமரத்தடி என்ற பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். இவர் அன்று தனது வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டார்.

Related Posts
1 of 13

இரவு செல்வராஜ் காட்டம்மன் கோவில் அருகே உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு தனது கடைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் அவர் கடைக்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்னர். பின்னர் கழுத்தை அறுத்து கொடூரமாக செல்வராஜை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காலையில் செல்வராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இது குறித்து அவரது உறவினர்களுக்கும், காரைக்குடி தெற்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். பின் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய் கொலை செய்த இடத்டதை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#karaikudi #worker #murder #case