IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் வேண்டாம்: கொலையான எஸ்.ஐ, மனைவி கண்ணீர்

52

 

எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக் கூடாது என்று களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சந்தை சாலையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொலை செய்யப்பட்டர். அங்குள்ள பள்ளிவாசல் பகுதிக்குள் இருந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி விட்டனர்.
இதற்கிடையே சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

 

இதையடுத்து அந்த தொகைக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வழங்கி, ஆறுதல் கூறினார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் வைத்து ஏஞ்சல் மேரி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது: எனக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நேரக் கூடாது, எனது மூத்த மகளின் கல்விக்கு அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்து உள்ளார். இளைய மகள் ஒரு மாற்றுத்திறனாளி. எனவே மூத்த மகளுக்கு அரசுப் பணி வழங்குவதாக முதல்வர் கூறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது என்றார்.

 

#kanyakumari #SI #murder #case #wife #speech