Home கட்டுரை 30 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட கங்காரு எலி

30 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட கங்காரு எலி

0

கங்காரு விலங்கோட சிறிய உருவமும் எலியின் உருவமும் இணைந்தால் கிடைக்கும் உருவமான விலங்குதான் கங்காரு எலி. இதன் ஆங்கில பெயர் டிபோடமைஸ் (Dipodomys).

கங்காரு எலியின் தோற்றம் வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வளரக்கூடிய சிறிய வகை உயிரினம். இது வறண்ட பகுதிகளில் தான் வாழக்கூடியவை.

இதில் பல வகைகள் உள்ளன. ஆனால் உருவத்தில் மட்டும் சிறிய மாற்றங்கள் காணப்படும். மற்றபடி அனைத்து கங்காரு எலிகளுக்கும் குணாதிசியங்கள் ஒன்று தான்.

இது இரவு முழுவதும் நன்றாக சுறுசுறுப்புடன் காணப்படும். பகல் நேரங்களில் நன்றாக தூங்கும்.

கங்காரு எலியின் உருவம் பார்த்தால் தலைப்பகுதி பெரியதாகவும் பின்னங்கால்கள் பெரியதாகவும் காணப்படும். முன்னங்கால்கள் சிறியதாக அமைந்திருக்கும்.

பின்னங்கால்கள் மூலம்தான் தாவுவது மற்றும் ஓடுவது போன்ற வேலைகளை செய்யும். முன்னங்கால்கள் மூலம் உணவுப் பொருட்களை பிடித்து சாப்பிட மட்டுமே பயன்படுத்தும்.

கங்காரு எலியின் குறைந்த பட்ச எடை 70 கிராம் முதல் 1.700 கிராம் வரை மட்டுமே வளரக்கூடியவை.

இதன் சிறப்புகள் என்னவென்றால் கங்காருகளுக்கு வயிற்றில் பை இருப்பது போன்று இவைகளுக்கு வாயில் பை இருக்கும். அதாவது சாப்பிடும் உணவுகளை பையினுள் சேர்த்துக் கொண்டு பின்பு பொறுமையாக ரசித்து சாப்பிடும்.

கங்காரு எலியின் உயரம் 6 இன்ச் மட்டுமே இருக்கும். அதன் வால் நீளம் மட்டுமே 8 இன்ச் வரை இருக்கும். பொதுவாக பெண் கங்காரு எலிகள் ஆண் கங்காரு எலிகளை விட அளவில் பெரியதாக இருக்கும்.

கங்காரு எலிகள் சாதாரணமாக தரையிலிருந்து 7 முதல் 9 அடி வரை தாவக்கூடியவை. அது காற்றில் சாதாரணமாக குதிக்கும் போது 10 கி.மீ வேகத்தில் குதிக்கும்.

குறிப்பாக அதன் சிறப்புகள் என்னவென்றால் காற்றிலேயே அதற்கு எந்த திசையில் தாவ வேண்டும் என முடிவு செய்து அந்த திசையில் திருப்பிக் கொள்ளும். அதனாலேயே அதனை பிடிப்பது மிகவும் கடினம்.

கங்காரு எலியிடம் ஒரு சிறப்பு வசதி உள்ளது. அது என்னவென்றால் Move freeze technology.

அதாவது கங்காரு எலி இரவில் உணவு தேடிச் செல்லும் போது ஏதேனும் ஆபத்தான சத்தம் கேட்டால் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அப்படியே உறைந்தது போன்று நின்றுவிடும்.

பின்புதான் அங்கு என்ன நடந்தது என கண்டுபிடித்துவிட்டு பின்பு அங்கிருந்து தப்பித்து ஓடிவிடும்.

கங்காரு எலி தங்குமிடம் பாலைவன பகுதிகளில் மட்டுமே. அதாவது வறண்ட நிலப்பரப்பு மற்றும் மணல் பகுதிகளில் மட்டுமே தங்கும்.

முதலில் மணல் பரப்பு பகுதிக்கு சென்றபிறகு அந்த பகுதியே சோதனையிடும்.

அதாவது குழி தோண்டிய பிறகு மணல் சரிந்து விழுகிறதா அல்லது எந்த அளவு ஆழமான அளவிற்கு குழி தோண்ட முடியும் என சோதைனையிட்டு பார்க்கும்.

பின்பு அந்த இடத்தில் வேறு விலங்கின் மூலம் ஆபத்து வருமான போன்ற சோதனை செய்துவிட்டு தான் அங்கு தங்க ஆரம்பிக்கும்.

கங்காரு எலிகள் எப்படிதான் தப்பித்து ஓடி வாழ்ந்தாலும் வல்லவனுக்கு வல்லவன் இருப்பது போன்று கங்காரு எலிகளை நரிகள் , ஆந்தைகள் மற்றும் கீரிகள் போன்ற உயிரினங்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும்.

எவ்வளவுதான் கங்காரு எலிகள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தப்பித்து ஓடினாலும் எதிர்வினை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்ற விலங்குகள் கங்காரு எலிகளை பிடித்து விடும்.

கங்காரு எலிகள் வறட்சி காலத்தில் தண்ணீரே கிடைக்காவிடினும் ஒருவித விதைகளை சாப்பிட்டு அதில் கிடைக்கும் தண்ணீரை குடித்து தன்னோட உடம்பிற்கு தேவையான சக்தியை எடுத்துக் கொள்ளும்.

கங்காரு எலிகள் நீண்ட நாட்களுக்கு தண்ணீரே கிடைக்காது என சரியாக கணித்தபிறகு இரை தேட வெளியே சென்றபிறகு ஒரு சில விதைகளை தன்னோட வாய் பையினுள் சேகரித்துக் கொள்ளும்.

பின்பு அதிலிருந்து தனக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளும்.

கங்காரு எலியின் கிட்னியில் ஒரு சிறப்பு உள்ளது. அதற்கு பெயர் கின்லேன் வளையம்.

அந்த வளையம் என்ன செய்யுமெனில் கங்காரு எலியின் சிறுநீரை மறுசுழற்சி செய்து அதன்மூலம் எவ்வளவு சத்துக்களை எடுக்க முடியுமே அதிலிருந்து எடுத்து கங்காரு எலியின் உடம்பிற்கு திரும்ப அனுப்பும்.

இதில் மற்றொரு விசயம் கங்காரு எலிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்காது. அதனால் தான் கங்காரு எலிகள் சாப்பிடாமல் கூட பல நாட்களுக்கு வாழ முடிகிறது.

Exit mobile version