IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பரதம் கற்கும் “தலைவி ” கங்கனா…

0 24

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக கங்கனா தற்போது பரதம் கற்று வருகிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்காக முன்னணி நடிகைகள் பல பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பெயர் உறுதியானது. அதன்படி அவர் படப்பிடிப்பிற்கு தயாரானார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா தோன்ற பலவித மேக்கப் டெஸ்ட்கள் அமெரிக்காவில் நடந்தது. இந்நிலையில் ஜெயலலிதா சிறப்பாக நடனமாடுபவர். எனவே அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனாவும் திரையில் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கங்கனா பரதநாட்டியம் கற்றுக்கொள்கிறார்.

அவருக்கு பரதநாட்டியத்தை கற்றுக்கொடுத்து வருபவர் நடன அமைப்பாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பயிற்றுவித்து வருகிறார். இந்த படத்திற்கான மற்ற படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது.

தமிழ் தெலுங்கின் முன்னணி நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மற்றும் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#KanganaRanaut #Takes #Bharatanatyam #In4Net