IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எக்ஸ்ட்டர்ன் ஆவாரா அத்திவரதர்? ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக் #108daysathivarathar

Get real time updates directly on you device, subscribe now.


அத்திவரதரின் வைபவம் வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் சில நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காக #108daysathivarathar என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களின் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசும் தக்க நடவடிக்கை எடுத்து ஆகம விதிகளின் படி அத்திவரதரை 108 நாட்கள் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்திலேயே இதுவரை கண்டிராத ஆன்மீக வளர்ச்சியை அத்திவரதர் தரிசனத்தில் கண்டுள்ளது. காஞ்சிபுரம் அனந்தபுஷ்கரணியில் எழுந்த அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து ஒரு மண்டலத்திற்கு காட்சியளிப்பார்.


இந்த நூற்றாண்டில் முதல்முறையாக வெளியில் வந்த அத்திவரதர் ஜுலை1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர். 37 நாட்களில் மட்டும் அத்திவரதர் சிறப்பு உண்டியல்களில் 4.90 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

தமிழகம் என்பது என்றுமே ஆன்மீக பூமிதான் என்பதற்கு இதுவே சரியான உதாரணம். அத்திவரதரை தரிசிக்க தினம்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். இதனால் வரதராஜ பெருமாள் கோவிலில் தினசரி செய்யவேண்டிய பணிகள் கூட செய்யமுடியவில்லை.


அத்திவரதர் தரிசனம் வருகின்ற 16ம் தேதியுடன் முடிவடைவதால் நாட்கள் நெருங்க நெருங்க தினம்தோறும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காஞ்சிபுர மாவட்டமே திணறுகிறது. இதனால் கூட்ட நெரிசலில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பே 108 நாட்கள் வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என நீட்டித்தால் நன்றாக இருக்கும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


வைணவ திவ்ய தேசங்களை குறிப்பிடும் வகையில் 108 நாள் தரிசனம் என்று அத்திவரதரை காண வழிவகை செய்யுமாறு கோவில் பாட்டாச்சாரியர்களும், அரசும் முடிவெடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோவில் குளத்திலிருந்து வெளியே எடுத்த அத்திவரதருக்கு தினமும் ஆராதணையோ அல்லது பூஜையோ செய்வதில்லை, எனவே 48 நாட்களுக்கு மேல் வெளியே வைப்பதால் எந்த பிரச்சனையும் வராது என்கின்றனர் வைணவ ஆச்சாரியார்கள்.


ஆன்மீக பெரியவர்கள் குறிப்பிடுகையில், 400 ஆண்டுகளுக்கு முன் அத்திவரதர் வெளியில் இருந்துதான் அருள் பாவித்து வந்தார். ஆங்கிலேயரிடமிருந்து அத்திவரதரை பாதுகாக்கவே அனந்த புஷ்கரணியில் வைக்கப்பட்டார்.

எனவே குறிப்பிட்ட 48 நாட்களில் திரும்பவும் அனந்த புஷ்கரணியில் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற வரலாற்று சான்று ஆவணங்கள் எதுவும் இல்லை என்றார். எனவே தாராளமாக 108 நாட்கள் அத்திவரதர் தரிசனத்தை அதிகரிக்கலாம். உலகம் முழுவதும் பக்தர்கள் வந்து தரிசிக்கலாம் என்றனர்.


எல்லா சடங்குகளும் பூஜைகளும் கடவுளுக்குதான். எனவே, பல நாட்களுக்கு கடவுளை தரிசிக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பதை மதிக்க வேண்டும். நிறைய பேர் அத்திவரதரை தரிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே அரசாங்கமும், கோவில் பாட்டாச்சாரியர்களும் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பு கோரிக்கை வைக்கிறது.


இந்நிலையில் அத்திவரதர் தரிசனத்தை 108 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் #108daysathivarathar என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது. ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள வாசிகள் இதனை ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader