கமுதி அருகே நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயங்கள் !

Get real time updates directly on you device, subscribe now.

கமுதி அருகே முஸ்டக்குறிச்சியில் மாசிக் களரி திருவிழாவையொட்டி 3 பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடைபெற்றன.

முஸ்டக்குறிச்சியில் இருளப்பசாமி, பாறைமுனியப்பசாமி, வாழவந்தம்மன் கோயில் மாசிக் களரி திருவிழாவை யொட்டி, பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவுகளாக நடைபெற்றது.

இப்போட்டிகளில் தலா 10 மாட்டு வண்டிகள் என, 30 மாட்டு வண்டிகள் மற்றும் பந்தய வீரா்கள் பங்கேற்றனா்.

முஸ்டக்குறிச்சியிலிருந்து கமுதி சாலையில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்துக்கு 12 கி.மீ. தூரத்துக்கும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்துக்கு 10 கி.மீ. தூரத்துக்கும் எல்லை நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகளுடன் பந்தய வீரா்கள் பங்கேற்றனா்.

இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு ரொக்கப் பரிசும், அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader