IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கணவர், குழந்தைகளை பார்க்க ஆசைப்பட்ட கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற பெயிண்டர்

58

கணவர் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டும் என சொன்ன கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கல்லந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (52). பெயிண்டரான இவர் பெங்களுரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.அப்போது அவர் தங்கியிருந்த பகுதியை சேர்ந்த சுவேதா என்ற பெண் சுபாசுக்கு அறிமுகமாகி உள்ளார். சுவேதாவுக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் இருந்த போதிலும், சுபாசுடன் நெருங்கி பழகியுள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி ஜாலியாக இருந்துள்ளனர். அதோடு இருவரும் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பார்களாம். அந்த சமயத்தில் சுவேதா, சுபாசுடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாராம்.

இதையடுத்து சுபாஷ்;, சுவேதாவை அழைத்துக்கொண்டு தனது சொந்த கிராமமான கல்லந்தலுக்கு அழைத்து வந்துள்ளார். இருவரையும் பார்த்த சுபாசின் அம்மா கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தனி அறைக்கு சென்று மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுவேதா, தனக்கு கணவரையும், குழந்தைகளையும் பார்க்க ஆசையாக உள்ளதாகவும், அதனால் ஊருக்கு செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ்; அம்மிக்கல்லால் சுவேதாவை அடித்துள்ளார். இதில் ஸ்வேதா ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து சுவேதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

#kallakurichi #love #mater #murder