IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தாய் வீட்டிற்கு சென்ற காதல் மனைவி வராததால் கணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

174


தாய்வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் என்ஜினீயர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.


கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளயத்தை சேர்ந்தவர் காளியப்பன் மகன் தனுஷ்கோடி. என்ஜினீயரான இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் நாமக்கல்லை சேர்ந்த பென்னி என்ற வெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை யொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.


இதையடுத்து இருவரும் கடந்த மாதம் நாமக்கல் சென்று அங்குள்ள இரு கிறிஸ்தவ ஆலயத்தில் வென்னியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் தனது காதல் மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து வசித்து வந்தார்.


இந்த நிலையில் பென்னி தனது கணவருடன் கடந்த வாரம் நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது தாய் பென்னிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து ஓரிரு நாட்கள் கழித்து தனுஷ்கோடி தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். இதையறிந்த பென்னியின் பெற்றோர் தங்களது மகளுக்கு உடல்நலம் சீரானதும் கச்சிராயப்பாளையத்துக்கு அனுப்பிவைப்பதாக கூறினார். அதே போல் பன்னியும் நீங்ககள் சொந்த ஊருக்கு செல்லுங்கள் நான் ஓரிரு நாட்கள் கழித்து வருகிறேன் என்று கூறினர்.


காதல் மனைவி தன்னுடன் வரவில்லையே என்ற ஏக்கத்தில் தனுஷ்கோடி அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன் தினம் மாலை சின்ன சேலத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது தந்தைக்கு செல் போனில் தொடர்புகொண்டு பென்னி தன்னுடன் வர வில்லை அவர்களது பெற்றோர் எங்களை பிரித்து விடுவார்களோ? என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. அதனால் பென்னி இல்லாத வாழ்க்கையை என்னால் வாழமுடியாது என்றும் நான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை தனது உறவினர்களுடன் சின்ன சேலம் கச்சிராயப்பாளையம் பகுதியில் தனுஷ்கோடியை தேடிவந்தனர்.


இந்த நிலையில் சின்னசேலம் அம்மையகரம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே தண்ட வாளத்தில் தனுஷ்கோடி ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கும் தந்தை காளியப்பனுக்கும் தகவல் கிடத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.


இரவு சேலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#kallakurichi #Husband #suicide #train