IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழக தொலைக்காட்சிகளுக்கு முன்னோடி கலாநிதிமாறனின் வெற்றிக்கதை

131

தமிழக தொலைக்காட்சிகளுக்கு முன்னோடி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். அதன் தலைவர் கலாநிதி மாறனைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் நாம் அறிந்துகொள்ள இருக்கிறோம்.

அடிப்படையில் பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் நுழைந்தவர் கலாநிதிமாறன்.

இவர் ஜுலை 24,1965ம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் இடத்தில் உள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம் பெரும் பணக்காரர் ஆவார்.

கல்வி

சென்னையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றார். லயோலா கல்லூரியில், இளங்கலை வணிகவியல் படிப்பை படித்து முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்கரான்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

1991 ஆம் ஆண்டில், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். காவேரி மாறன் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார். இவர்களுக்கு காவ்யா என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ஆம் ஆண்டுப் பிறந்தது.

தொழில்

படிப்பு முடிந்ததும் குங்குமம் இதழுக்குப் பொறுப்பு ஏற்றார். அச்சிட்டு வினியோகிக்கப்படும் இதழ்களுக்கு மாற்றாக, ‘காணொலி இதழ்’ ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார்.

இப் பரிசோதனையின் விளைவாகப் பிறந்ததுதான் ‘பூமாலை வீடியோ இதழ்’. இந்தப் புதுமை முயற்சி தந்த அனுபவமே செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆரம்பிக்கத் தூண்டியது.

1993 ஆம் ஆண்டில் சன் டிவி நிறுவனம் உருவானது. தமிழில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக, கன்னடத்தில் ‘உதயா’, தெலுங்கில் ‘ஜெமினி’, மலையாளத்தில் ‘சூர்யா’, அலைவரிசைகளை உள்ளடக்கிய ‘சன் நெட்வொர்க்’ என்ற குழுமத்தை நிறுவினார்.

ஸ்பைஸ் ஜெட்

இன்றைய இந்திய பொருளாதார சூழலில் விமானம் நிறுவனம் நடத்துவதும் அதில் பங்குகள் வைத்திருப்பதும் சாதாரணமே !

அந்தவகையில் இவர் ஆரம்பத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். அந்த நிறுவனம் தொடர் இழப்புகள் மூலம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட பொழுது, அந்த நிறுவனத்தை அதனுடைய பங்குதாரர்களில் ஒருவருக்கு விற்று விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

கலாநிதி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன் வழி பேரன் என்பது இவரது அளப்பெரிய முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.