காலம் கடந்து வாழ்ந்த காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பிறந்தநாள் கட்டுரை

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை காதல் மன்னன் என்று சொன்னால் ரசிகர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது ஜெமினி கணேசன். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், பல்வேறு உயரிய விருதுகள், கொண்டாடி மகிழும் ரசிகர்கள் நிறைந்திருந்தது ஜெமினி கணேசனின் வாழ்க்கை. இன்று அவரது 101 பிறந்த நாளை முன்னிட்டு காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கை குறித்து இங்கு காணலாம்.

தமிழகத்தில் புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பின்னர், ஒரு மருத்துவராகும் கனவோடு தனது வாழ்க்கை தொடங்கினார். அந்த நேரத்தில் அவருக்கு அலமேலு என்பவருடன் திருமணமும் நடந்திருந்தது.

இப்படியான சூழலில், தனது குடும்பத்தின் நிலையை உணர்ந்து தனக்கான ஒரு வேலையை தேடி கொள்ள வேண்டியிருந்த சூழ்நிலையில் ஜெமினி கணேசனுக்கு சென்னை மெட்ராஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் ஆசியராக வேலை பார்க்கும் பணி கிடைத்தது, ஆனால் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது ஜெமினி ஸ்டுடியோவில் கிடைத்த புரொடக்‌ஷன் எக்சிக்யூட்டிவ் வேலை.

இதுவே, இவரை பிற்காலத்தில் கணேசன் என்ற அவரை, ஜெமினி கணேசன் என மாற்றியது. தொடர்ந்து சினிமா நடிகர்களின் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் இறங்கி, கோடம்பாக்கத்தில் பம்பரமாக சுழலத் தொடங்கினார் ஜெமினி கணேசன். அப்போது வந்ததுதான் அவருக்கான முதல் பட வாய்ப்பு. எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் வாழ்க்கையை தழுவி உருவான மிஸ் மாலினி திரைப்படத்தில் நடித்தார் ஜெமினி. ஆனால், படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியது.

பட்டாம்பூச்சிகளுக்கு நடுவில் பூவாய் மலர்ந்த ஜெமினி கணேசனின் 101-வது பிறந்தநாளில் அவரை நினைத்து வாழ்த்துவோம்.

அதன் பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றாலும் மக்கள் யாரும் அவரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் ஒரு அவரது திரை வாழ்க்கையை கவனிக்கத் தொடங்கிய படம்தான் மனம்போல் மாங்கல்யம். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்ரி. இந்த திரைப்படம் தான் ஜெமினி கணேசனின் சினிமா பயணத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. பிற்காலத்தில் இவர்களின் ஜோடியில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து ஜெமினி கணேசன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். ஒரு பக்கம் எம்.ஜி.ஆரின் படங்கள் மாஸ் காட்ட, சிவாஜியின் படங்கள் க்ளாஸ் அப்லாஸ் வாங்கி கொண்டிருந்தது. இதற்கிடையில், தனக்கான பாணியாக ரொமான்ஸை தேர்ந்தெடுத்து, அதில் அவருக்கான வெற்றியை கொடுக்க தொடங்கினார் ஜெமினி. கல்யாண பரிசு, தேன் நிலவு, கொஞ்சும் சலங்கை, சாந்தி நிலையம் உள்ளிட்ட ஜெமினியின் பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே ஹிட் அடித்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களான அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா என பலருடன் சேர்ந்த நடித்து வெற்றிகளை குவித்தார் இந்த காதல் மன்னன். காலங்கள் உருண்டோட, கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவில் இருந்து கேரக்டர் ரோல்களுக்கு வந்த ஜெமினி அதிலும் தனது ட்ரேட்மார்க்கை பதிவு செய்யத் தொடங்கினார்.

உன்னால் முடியும் தம்பியில் கண்டிப்பான அப்பாவாகவும், அவ்வை சண்முகியில் முதுமையிலும் காதல் வழியும் குறும்புகார தாத்தாவாகவும் வெரைட்டி காட்டி, ரசிகர்களிடம் கிளாப்ஸ் வாங்கினார் ஜெமினி கணேசன். மேட்டுக்குடி படத்தில் கார்த்திக் – கவுண்டமணி கூட்டணியுடன் இவர் செய்த நகைச்சுவை அட்டகாசம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ’ஜெமினி’, ’அடிதடி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெமினி கணேசனாகவே வந்து லவ் மெமரீஸ் தூவி ரகளை செய்தார்.

ஜெமினி கணேசனின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தாலும், சாதாரண புரொடக்‌ஷன் மேனஜரில் தொடங்கி, இந்தியாவின் உயரிய விருதான பத்மஶ்ரீ வரை நீண்ட அவரது பயணம், இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமையக்கூடியது. பட்டாம்பூச்சிகளுக்கு நடுவில் பூவாய் மலர்ந்த ஜெமினி கணேசனின் 101-வது பிறந்தநாளில் அவரை நினைத்து வாழ்த்துவோம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More