IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கார் – லாரி நேருக்கு நேர் மோதல் 4 பேர் உயிரிழப்பு

Get real time updates directly on you device, subscribe now.


காரும் லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் சப்-இன்ஸ்பெக்டர், மனைவி, குழந்தை உள்பட நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள விநாயகா புரத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை முகாமில் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி தேவிபாலா. இவகளுக்கு ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே தங்கியிருந்தார்.


இந்நிலையில் செல்வம் சத்தியமங்குலம் அருகே வட வள்ளியில் வாடகைக்கு வீடு பார்த்திருந்தார். இதைதொடர்ந்து வீடு மாற்ற பொருட்களை எடுத்து செல்வதற்காக அந்த பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியான முருகேசன் என்பவரை காரில் அழைத்துக் கொண்டு சென்றார். கரை செல்வம் ஓட்டினார். அவரது மனைவியும், குழந்தையும் அவரது இருக்கைக்கு அருகே உட்கார்ந்து வந்தனர். முருகேசன் காரின் பின் பகுதியில் அமர்ந்து வந்தார்.


கார் வடவள்ளி அருகே சென்றபோது எதிரே கர்நாடகாவில் இருந்து சத்தியமங்குலம் பகுதிக்கு பாரம் ஏற்றிவந்த லாரி எதிர்பாராத விதமாக காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. உடனே லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


விபத்து நடந்த சத்தம் கேட்டு வந்த பொது மக்கள் உடனே இது பற்றி சத்தியமங்குலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரந்து வந்தனர். பின்னர் பொது மக்கள் உதவியுடன் 4 பேரையும் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டனர்.


இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.


#Kadalur #car #Truck #Accident

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More