பத்திரிக்கையாளர்களாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்த பிரபலங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

பத்திரிக்கை துறைகளில் வேலை செய்து சினிமாவுக்குள் நுழைந்து தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட பிரபலங்களை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

நயன்தாரா மலையாள சேனல்ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துருக்காங்க.

கே.வி.ஆனந்த்

இயக்குனர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் பற்றி இன்னைக்கு எல்லாத்துக்குமே தெரியும்.

அவர் ஒளிப்பதிவுள ரிலிசான சிவாஜி, முதல்வன், பாய்ஸ் போன்ற படங்கள் வெற்றி பெற்ற படங்கள். அதேமாதிரி அயன், மாற்றான், அனேகன், கோ, கவண், காப்பான் போன்ற படங்ளும் வெற்றி படங்கள் தான்.

இந்நிலையில இயக்குனர் கே.வி.ஆனந்த், சென்னை லயோலா கல்லூரியில விசுவல் கம்யூனிகேசன் முடிச்சிட்டு கல்கி, இந்தியா டுடே பத்திரிக்கைகள்ல போட்டோ ஜெர்னலிஸ்டா வேலை பாத்து தான் சினிமாவுக்குள்ள என்ட்ரி ஆகிருக்காரு.

நயன்தாரா

கடந்த 2005 ல சரத்குமாரோட இணைந்து ஐயா திரைப்படத்துல நடிச்சாங்க நயன்தாரா.

2005 முதல் 2020 வரைக்கும் சினிமா துறையில நிலைத்து இருக்கிறதுக்கு நயன்தாராவோட தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான் முக்கியமான காரணம் னு சொல்லலாம்.

இதே நேரத்துல நயன்தாராவும் மீடியாவுல இருந்து தான் சினிமாகுள்ள வந்துருக்காங்க.

இவங்க, தனியார் மலையாள சேனல்ல சமயம் ங்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துருக்காங்க.

அதற்கு அப்புறம் தான் சினிமா வாய்ப்பு கிடைச்சி இன்னைக்கு லேடி சூப்பர் ஸ்டாரா வலம் வற்ராங்க.

ஆர்.ஜெ.சிவா

கடந்த 2007ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரிலிசான சென்னை 600028 திரைப்படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமானார்.

அதற்கு பின்பு அதே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ரிலிசான சரோஜா படத்தில் நடித்து பிரபலமானார்.

இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.

இவர், சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சியில் அறிவிப்பாளராக பணிபுரிந்தார்.

ஆர்.ஜே.பாலாஜி

கடந்த 2013ல் ரிலிசான எதிர் நீச்சல், தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி, சினிமா விமர்சகர்.

பின்பு, வடகறி படத்தில் முழு நீள காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

2016ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்திலும் நடித்துள்ளார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பிக் எப் எமில் வேலை செய்துகொண்டிருந்தார் பாலாஜி.

ப்ரியா பவானி சங்கர்

கடந்த 2017 ல ரிலிசான மேயாத மான் திரைப்படம் மூலமா சினிமாவுக்குள்ள என்ட்ரி கொடுத்தவங்க ப்ரியா பவானி சங்கர்.

அதற்கு அப்புறம், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படத்துல நடிச்சாங்க. இப்ப கமலோட இந்தியன் 2 நடிச்சிக்கிட்டு இருக்காங்க.

ப்ரியா பவானி சங்கர், புதிய தலைமுறை சேனலோட செய்தி வாசிப்பாளர்.

லாஸ்லியா மரியநேசன்

இலங்கையில உள்ள கிளிநொச்சியில பிறந்தவங்க. அந்த நாட்டுல இருக்கிற ரொம்ப முக்கியமான தொலைக்காட்சியான சக்தி ல செய்தி வாசிப்பாளராக இருந்துருக்காங்க.

பிக்பாஸ் சீசன் 3 ல கலந்துகிட்டது மூலமா உலகம் முழுவதும் பிரபலமாகிட்டாங்க.

இப்ப, ப்ரண்ட்சிப் ங்கிற படத்துல கிரிக்கெட் வீரர் கர்பஜன் சிங்குக்கு ஜோடியா நடிக்கிறாங்க லோஸ்லியா.

#losliya #nayanthara #kvanand #rjbalaji #rjshiva #in4net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader