அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த ஜோ பிடன்

Get real time updates directly on you device, subscribe now.

அமெரிக்க அதிபர் தேர்தல்களில் வரலாற்று சாதனையாக அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பிடன் பெற்றுள்ளார்.

உலக நாடுகளே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் இருதினங்களுக்கு முன் செவ்வாய் கிழமை நடைபெற்றது. தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் ஆகிய இருவருமிடையே கடுமையான போட்டி நிலவியது.

இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட இது அதிகம் என தேசிய பொது வானொலி (என்.பிஆர்) தெரிவித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு நேற்று புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதிலும் வேட்பாளர்கள் இருவருக்கும் குறைந்தபட்ச வாக்குகள் எண்ணிக்கை மட்டுமே வித்தியாசமாக இருந்தன. எனினும் தற்போதைய நிலவரப்படி ஜோ பிடன் அதிகபட்ச வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்காத வகையில் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க வரலாற்றிலேயே அதிகமான வாக்குகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சாதனையையும் முறியடித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, பிடனுக்கு 72 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட இது அதிகம் என தேசிய பொது வானொலி (என்.பிஆர்) தெரிவித்துள்ளது.2008ல் ஒபாமா 67.32 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் படி ஜோ பிடன் 264 வாக்குகளும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader