உங்கள் பணி உயர்வுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

Get real time updates directly on you device, subscribe now.

2020 மார்ச் தொடங்கி இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பலர் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நீங்கள் அலுவலகத்திற்கு நாள்தோறும் செல்லாமல் எவ்வாறு உங்களுக்கு பணி உயர்வு கிடைக்கும் என நினைத்ததுண்டா?

சில சமயம் நீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்களோ, சமையல் செய்து கொண்டிருக்கிறீர்களோ அல்லது பிற வேலைகளில்

அங்குதான் உங்களின் மின்னஞ்சல்கள் பெரும் பங்கை ஆற்றுகின்றன. ஆம் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை வடிவமைப்பதை ஒரு கலை போல செய்ய வேண்டும். அதுவே உங்களின் உயர் அதிகாரியை உங்களை நோக்கி கவனிக்க வைக்கும்.

சரி இதுகுறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

மின்னஞ்சலின் பங்கு

நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்போது மின்னஞ்சல் அனுப்பினால் சுருக்கமாக என்ன சொல்ல வருகிறீர்களோ, அதை மட்டும் சொல்லாமல் சொல்லவரும் விஷயத்தில் உங்களுக்கு ஒரு தெளிவான அறிவு உள்ளது என்பதை போல நீங்கள் காட்டிக் கொள்ள வேண்டும்.

ஆனால், அதே சமயம் நீங்கள் தேவையில்லாமல் அதிகமாக `ஷோ ஆஃப்` செய்கிறீர்கள் என்பதுபோல உங்கள் உயர் அதிகாரி உணராமல் பார்த்து கொள்ளுங்கள்.

உங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து மின்னஞ்சல் வந்தால், அவர்கள் அதை எந்த மாதிரியான மனநிலையில் எழுதி உள்ளனர் என்பதை பயன்படுத்தியிருக்கும் வார்த்தையை வைத்து கண்டறியுங்கள். அதேபோல ’ஜூம் அல்லது ஸ்கைப்’ கால்களிலும் அவர்களின் மொழியை கவனியுங்கள்.

நீங்கள் வீட்டிலேயே பணிபுரியும் சமயம் உங்களின் சக பணியாளர் அலுவலகத்திற்கு சென்று பணிபுரியும் சூழலும் இருக்கலாம். எனவே நீங்கள் அரிதாகவே உங்கள் உயர் அதிகாரியை பார்க்கும்பட்சத்தில் நீங்கள் சற்று கடினமாகத்தான் உழைக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்

அதேபோல உயர் அதிகாரியை மட்டுமல்ல, உங்களுடன் பழகுபவர்களையும் உங்கள் வசம் ஈர்க்க நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்,

1. சிரித்த முகம், 2. மரியாதையான பேச்சு, 3. இனிமையான சொற்கள்.

இது அனைத்தையும் தாண்டி உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அது குறித்து நீங்கள் பேச வேண்டும். எந்த ஒரு விஷயமும் பேசப்படாமல் தீர்க்கப்படாது.

நீங்கள் அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் கண் முன்னே பணிபுரியும்போது, நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பது அவருக்கு தெரியும்.

ஆனால் நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்போது, சில சமயம் நீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்களோ, சமையல் செய்து கொண்டிருக்கிறீர்களோ அல்லது பிற வேலைகளில் ஈடுபட்டுள்ளீரோ என அவர்களுக்கு அச்சம் எழுவதை நிச்சயம் அவர்களால் தவிர்க்க முடியாது.

எனவேதான் வீட்டிலிருந்து பணிபுரியும் ஒரு ஊழியர் தனது உயர் அதிகாரியுடன் அடிக்கடி பேச வேண்டும் என்கிறார் ’தி ஒர்க் ஃபவுண்டேஷன்’ என்னும் ஆய்வுக் கழகத்தின் மூத்த கொள்கை ஆலோசகர் மேலானி வில்கிஸ்.

“இந்த பெருந்தொற்று காலத்தில் பலர் முன்பைக் காட்டிலும் அதிக பொறுப்புகளை எடுத்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதை தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியும்படி செய்ய வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம். அது மின்ன்ஞ்சல் மூலமாக கூட இருக்கலாம்,” என்கிறார் அவர்.

மேலும் முந்தைய காலங்களை போலவே உங்கள் பணியை பகுப்பாய்வு செய்யும் ஆலோசனை கூட்டம் உங்களின் உயர் அதிகாரிகளுடன் நடப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் உங்கள் உயர் அதிகாரிகளுக்கும் நீங்கள் செய்தது, செய்யப்போகும் பணி குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதுவே உங்கள் பணி உயர்வுக்கு உதவும்.

அலைபேசி, மின்னஞ்சல், வீடியோ கால் என உங்கள் உயர் அதிகாரியிடம் தொடர்ந்து பேசுங்கள்

  • நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்
  • பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள்
  • உங்கள் புதிய யோசனைகளை முன் வையுங்கள்
  • உங்கள் ஆண்டு பணி ஆய்வு நடக்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்
  • உங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள எச் ஆர் கொள்கை பின்பற்றப்படுகிறதா என்பதை கவனியுங்கள்

இது அனைத்தும் ஊழியர்களுக்கு என்றால் உயர் அதிகாரிகளுக்கும் சில பொறுப்புகள் உண்டு. உயர் அதிகாரிகள் எந்த ஊழியர் எவ்வளவு நேரம் எந்த பணியை செய்கிறார் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More