IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாம்பை விட்டு கடிக்க விடும் விநோத திருவிழா

0 79

ஜார்கண்ட் மாநிலத்தில் பாம்பை விட்டு மனிதர்களின் மேல் கடிக்க விடும் விநோத திருவிழாவை கடந்த 100 ஆண்டுகளாக கொண்டாடி வருவதாக பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சங்கர்தா கிராமத்தில் பழங்குடியின மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் குலதெய்வங்களாக நாகப்பாம்புவை வைத்து வித்தியாசமான முறையில் திருவிழா என்ற பெயரில் கடந்த 100 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர்.

இத்திருவிழாவில் பாம்பை வைத்து ரத்தத்தின் மீது அமர்ந்த பாம்பை தங்கள் மீது கடிக்க வைக்கும் காட்சி பார்ப்போரின் மனதை பதற வைக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன.

இதுகுறித்து திருவிழா பற்றி பங்கேற்பவர்களிடம் கேட்ட போது, இந்நிகழ்ச்சி மூலம் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மனவலிமை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுமாதிரியான செயல்களை யாரும் முயற்சிக்க வேண்டாம் என கூறப்படுகிறது.
#Jharkhand #SnakeCharmers #Uniqueritual #In4Net