IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்கத் தொடங்கியது! முதல்வர் போட்ட வெடிகுண்டு

Get real time updates directly on you device, subscribe now.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் சிதம்பரமும் ஒருவகை காரணம். ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாததால் இப்போது சிதம்பரம் சிறையில் இருக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

நான்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. இத்தொகுதியில் முன்னீர்பள்ளம் என்ற இடத்தில் இன்று முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் பேசியபோது, தமக்கு வாக்களித்த மக்களை காங்கிரஸ் எம்.ஏல்.ஏக்கள் நினைக்காமல் பதவிக்கு ஆசைப்பட்டு மக்களுக்கு துரோகம் செய்தனால் தான் தற்போது தேர்தலை நாம் சந்திக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியால் தான் நான்குநேரி தொகுதி தேர்தல் நடைபெறுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியினருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்திற்கு கருணாநிதியும் அவரது மகன் ஸ்டாலினும் தொடர்ந்த வழக்கினால் தான் ஜெயலலிதா மனமுடைந்து துன்பத்திற்குள்ளாகி உயிரிழந்தார். ஆனால் தற்போது ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

தற்போது ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து மனுக்களை வாங்குகிறார். இதேப்போல் ஆட்சியில் அமர்ந்து மக்களிடம் மனுக்களை வாங்கியிருந்தால் ஸ்டாலின் நல்ல தலைவர். ஆனால் அவர் மேடைகளில் என்ன பேசுகிறார் என்பதை அவருக்கே தெரியாமல் பேசிவருகிறார் ஸ்டாலின்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ஒருவகை காரணம். ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாததால் தான் தற்போது சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார். இவ்வாறு முதல்வர் பழனிச்சாமி நான்குநேரி தொகுதி பிரச்சாரத்தில் பேசினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader