IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் அமைதி பேரணி

Get real time updates directly on you device, subscribe now.


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தை முன்னிட்டு இன்று மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

அதன்படி முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் கருப்புச்சட்டை அணிந்து ஜெயலலிதாவின் மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று காலையிலிருந்து சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

அமைதி பேரணியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த பேரணியில் ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு நினைவிடம் நோக்கி நடந்து சென்றனர்.

பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணியில் ஜெ. மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஜெ.நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜெவின் நினைவு தினத்தில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader