IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜெயலிலதாவின் மரணம் குறித்து மருத்துவகுழு தான் ஆராய முடியும் – உச்சநீதிமன்றம்

Get real time updates directly on you device, subscribe now.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சை குறித்து உண்மை அறிய மருத்துவ நிபுணர்கள் குழு மட்டுமே உண்மையான நிலைமைய ஆராய முடியும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை ஒரு தலைப்பட்சமாகவும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதாகவும், அதன் வரம்பை மீறுவதாகவும், தவறான எண்ணத்துடனும் உள்ளது என கூறியுள்ளது.

அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் பொறுப்பில் இருந்த ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 70 நாட்களுக்கு மேலாக ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader