IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஒரே மீனை ரூ.13 கோடிக்கு ஏலம் எடுத்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர்

133

 

மீன் சந்தையில் ஏலம் விடப்பட்ட மீன் ஒன்று இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய்க்கு விலைபோய் உள்ளது.

ஆசிய நாடான ஜப்பானில் டுனா கிங் என்றழைக்கப்படும் கியோஷி கிமுரா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்து பிரபலமானவர். அதேபோல் இந்த ஆண்டும் மீன்கள் விற்பனைக்கு வந்தது.

அவ்வாறு வந்த 276கிலோ கிராம் எடை கொண்ட மெகா சைஸ் மீன் ஒன்று 193.2 மில்லியன் யென் தொகைக்கு ஏலம் போனது. அதாவது அமெரிக்க டாலர் அளவில் இது 1.8 மில்லியன் ஆகும். இந்திய மதிப்புக்கு இந்த மீன் சுமார் 13 கோடி ரூபாய்க்கு நிகரானது.

இந்த மீனை ஏலம் எடுத்தவர் புகைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது. கியோஷி கிமுரா இதனை பலத்த போட்டிகள் மத்தியில் ஏலத்தில் எடுத்துள்ளார்.

#Japan #fish #hotel #owner #auction