IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வினாடி – வினா போட்டிகள் – ராமநாதபுரம் மாணவர்களுக்கு 2ம் இடம்

Get real time updates directly on you device, subscribe now.

இராமநாதபுரம், டிசம்பர்.12 – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி – வினா போட்டிகள் பள்ளி மாணவ – மாணவியருக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டிகள் முதலில் தாலுகா அளவிலும் பின்னர் மாவட்ட அளவிலும் மண்டல அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில் மாநில அளவிலான வினாடி வினா போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் ஜுனியர், சீனியர் என பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ஏராளமான மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஜுனியர் பிரிவினருக்கான வினாடி வினா போட்டியில் ராமநாதபுரம் நேசனல் அகடாமி பள்ளி மாணவிகள் ஜெகத் ஜனனி, ஹர்சிதா,மாணவன் சுகிர்தன் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader