IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சமூக இடைவெளியே உறுதிப்படுத்த எலக்ட்ரிக் டேக் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

இத்தாலி மியூசியம் ஒன்று பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்கவும் சமூக இடைவெளிய உறுதி படுத்தவும் எலக்ட்ரிக் டேக்கை பயன்படுத்துகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. சுமார் 32 ஆயிரத்து 735 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இரண்டரை மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பொதுமக்கள் வெளியேறும் போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியின் பெர்காமோ என்ற இடத்தில் அகாடெமியா கர்ராரா மியூசியம் ஒன்று உள்ளது. சுமார் 70 நாட்களுக்குப்பின் கடந்த மே 22-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த மியூசியத்தில் உள்ள ஆர்ட் கேலரியை பார்வையிட வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய எலக்ட்ரிக் டேக்கை உருவாக்கியுள்ளது.

பார்வையாளர்கள் எலக்ட்ரிக் டேக்கை கையில் கட்டாயம் கட்ட வேண்டும். அப்படி கட்டியிருக்கும்போது ஒருவர் மற்றொருவரிடம் இருந்து 1.5 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவில்லை என்றால் எலக்ட்ரிக் டேக் அதிர்வை ஏற்படுத்தும். மேலும் எல்.இ.டி. லைட்டும் எரியும். இதன்மூலம் அவர்கள் சமூக இடைவெளியை உறுதி செய்து கொள்வார்கள். இதன்மூலம் பார்வையாளர்கள் பாதுகாப்பாக மியூசியத்தை சுற்றிப் பார்த்துச் செல்லலாம் என்கின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader