IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன் தேர்வு

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைவராக இருப்பவர் தமிழர் சிவன். இவர் சர்வதேச அளவில் பெருமை மிக்க, வோன் கர்மான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த சர்வதேச நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடன் நாட்டில் உள்ள இண்டர்நேசனல் அகடமி ஆஃப் அஸ்ட்ரோநாடிக்ஸ் நிறுவனம். உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளை தேர்வு செய்து அவர்களை கௌரவப்படுத்தி வருகிறது.

அறிவியல் உலகில் பல அங்கீகாரங்களைப் பெற்ற இந்த நிறுவனம் பெருமை மிகுந்த அறிவியல் சொசைட்டியின் செயல்பாடுகள் உலக அளவில் பிரசித்திப்பெற்றவை. இந்த நிறுவனம், வருடம் தோறும் உலக அளவில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து ’வோன் கர்மான் ‘ என்கிற விருது வழங்கி விஞ்ஞானிகளைப் பெருமைப் படுத்தி வருகிறது.

Genuine Indian Payment Gateway

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வோன் கர்மா விருதிற்கு இஸ்ரோ சேர்மனான விஞ்ஞானி சிவனை தேர்ந்தெடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 2021 மார்ச் மாதம் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் இந்த விருது சிவனுக்கு வழங்கப்படவிருக்கிறது. விண்வெளித்துறையில் பல்வேறு பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் கௌரவ விருது இது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader