IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அமைச்சர் என்றால் எது வேண்டுமனாலும் பேசலாமா ? ராஜேந்திர பாலாஜிக்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம்

Get real time updates directly on you device, subscribe now.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களிடம் பேசிய பேச்சிற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு நாவடக்கம் தேவை என தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நான்குநேரி இடைத்தேர்தல் தொகுதி பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அப்பகுதியைச் சேர்ந்த் இஸ்லாமியர்களிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியீட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நான்குநேரி இடைத்தேர்தல் கட்சிப்பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் களக்காடு பகுதியில் கேசவநேரி என்ற ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடை கோரிக்கைக்காக சென்றுள்ளனர். அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதியிடம் கட்சி அரசியலை தாண்டி பொதுமக்கள் வேட்பு மனுத்தாக்கல் கொடுப்பது இயல்பானது.

அந்தவகையில் மனு கொடுக்கும் போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி அமைத்திருப்பதால் நீங்களும் கிறிஸ்தவர்களும் எங்களுக்கு ஓட்டு போடமாட்டீர்கள். அதனால் உங்களுக்கு எதற்கு நாங்கள் செய்யனும் ? என ராஜேந்திர பாலாஜி கேட்டிருக்கிறார். அதோடுமட்டுமில்லாமல், காஷ்மீரைப் போன்று உங்களையும் தனியாக ஒதுக்கி வைத்திருக்க வேண்டும் என திமிராக பேசியுள்ளார். யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் அவருக்கு நாவடக்கம் தேவை என்றார்.

பொதுவாக கடந்த 3 ஆண்டுகளாகவே அவர் கொடுக்கும் பேட்டிகள் அனைத்தும் நகைச்சுவை நடிகரை போன்றே பேசிவருகிறார். அவரை பலரும் விமர்சித்தும் தன்னுடைய பாணியை மாற்றாமல் தொடர்ந்து பேசி வருகிறார். மக்கள் சேவை என்பது ஓட்டுப் போட்டவர்கள், எதிர்த்து ஓட்டுப் போட்டவர்கள் மற்றும் மாற்றுக்கருத்து உடையவர்கள் என்று பாராமல் அனைவருக்கும் தொடர்ந்து சேவை செய்வதுதான் கலங்கமில்லா உன்னதமான அரசியல். அதற்கு பங்கம் விளைவிப்பது போன்று ராஜேந்திர பாலாஜி பேசிவருகிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு அதிமுகவின் கொள்ளைக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரானது. உடனே இதனை தலைமை கவனித்து கண்டிக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பெறுப்பான அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் அமைச்சர் பேசிவருவது, அவரது அரசியலுக்கு நல்லது என்பதையும், நல்லெண்ணத்தோடு சுட்டிக் காட்டுகிறோம் என்றார்.

ராஜேந்திர பாலாஜியின் பேச்சு, அதிமுகவினர் இதுவரை பெற்ற வெற்றிக்கும் இஸ்லாமியர்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று பேசியுள்ளார். இவரது பேச்சால் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அதிமுகவிற்கு கணிசமாக வாக்குகள் குறையும் என்பதால் முதல்வர் பழனிச்சாமி கலக்கத்தில் உள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader