IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ரஜினிகாந்த்

Get real time updates directly on you device, subscribe now.

 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்க்கு ஒரு பக்கம் ஆதரவு மறு பக்கம் எதிர்ப்பு என்ற நிலை நாடு முழுவதும் காணப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது வீட்டின் முன் பேட்டி அளித்துள்ளார்.

அதில் என்பிஆர் (தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு) நாட்டுக்கு மிகவும் அவசியம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை சில அரசியல் கட்சிகள் பீதி கிளப்பி விடுகின்றனர். இந்தியா பிரிவினையின் போது எங்கும் போகாமல் இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அப்படி பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால் அவர்களுக்காக முதல் குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக இதை பிரட்சனையாக்கு கின்றனர். இதற்கு சில மத போதகர்களும் துணை போகின்றனர். மேலும் இது போன்ற விவகாரங்களில் கல்லூரி மாணவர்கள் மிகவும் கவனத்துடன் செயல் பட வேண்டும். இந்த சட்டம் பற்றி தங்களது பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அரசியல்வாதிகளின் பேச்சை கேட்காமல் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தான் சிக்கல் வரும். அரசியல் கட்சியினர் தங்கள் சுயநலத்திற்காக உங்களை பயன் படுத்திவிட்டு பின்னர் கைவிட்டு விடுவர். அதனால் ஜாக்கிரதையாக செயல் படுங்கள்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாமும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மேண்டும். இவ்வாறாக ரஜினி பேட்டி அளித்துள்ளார்.

#Islam #noeffect #citizenship #law #Rajinikanth

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More