IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எஸ்பிஐ மற்றும் ஐஆர்சிடிசி இணைந்து ரூபேவில் தொடர்பு இல்லாத கடன் அட்டை அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

எஸ்பிஐ கார்டு மற்றும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) இரண்டும் இணைந்து, இன்று IRCTC (ஐஆர்சிடிசி) SBI (எஸ்பிஐ) கார்டை RuPay (ரூபே) இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தின. அடிக்கடி பயணம்செய்யும் ரயில்வே பயணிகளுக்கு வெகுமதி அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த அட்டை, சில்லறை விற்பனை, உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் சிறந்த சலுகைகளுடன், இந்திய ரயில்வேயில் பயணிகளுக்கு பயணத்தின் அதிகபட்ச சேமிப்பை வழங்குகிறது, மேலும் பரிவர்த்தனை கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது.

RuPay இயங்குதளத்தில் IRCTC SBI (எஸ்பிஐ) கார்டை வைத்திருப்பவர்கள் IRCTC (ஐஆர்சிடிசி) இணையதளத்தில் செய்யப்பட்ட ஏசி 1, ஏசி 2, ஏசி 3, ஏசி சிசி முன்பதிவுகளில் 10% வரை மதிப்பை திரும்பப் பெறுகிறார்கள். இந்த அட்டையில் நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. வசதியான, பாதுகாப்பான மற்றும் வேகமான பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டைகளை பாதுகாப்பான ரீடரில் தட்டலாம்.

ரயில்வே மேற்கொண்ட பல மேக் இன் இந்தியா நடவடிக்கைகளில் IRCTC-SBI (ஐஆர்சிடிசிஎஸ்பிஐ) இணைந்து வழங்கும் கடன் அட்டையும் ஒன்றாகும். RuPay (ரூபே) இயங்குதளத்தில் உள்ள IRCTC SBI (ஐஆர்சிடிசி எஸ்பிஐ) கார்டு சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் மிகவும் பிரபலமாக தேர்ந்தெடுக்கும் கார்டாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.”என்று இந்திய ரயில்வே மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அரசாங்கத்தின் மாண்புமிகு அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த கூட்டுக் குறித்து கருத்து தெரிவித்த திரு எம்.பி. மால் , IRCTC (ஐஆர்சிடிசி) யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், “SBI (எஸ்பிஐ) கார்டுடனான இந்த கூட்டு இதன் துவக்கத்துடன் எங்களுக்கு மற்றொரு பெருமையை சேர்க்கிறது மற்றும் RuPay (ரூபே) இயங்குதளத்தில் மற்றொரு இணைந்த நிறுவன கிரெடிட் கார்டு / விசுவாச திட்டத்தை அளிக்கிறது. அடிக்கடி ரயிலில் பயணிப்பவர் களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் எங்கள் முன்னோக்குடன் இது ஒத்திசைவாக உள்ளது. மேலும் இந்த பிணைப்பின் மூலம் ஏராளமான அட்டைதாரர்களை அடைய பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளன” என்றார்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader