மீண்டும் சர்ச்சைக்குரிய பட டைட்டிலை வெளியிட்ட சந்தோஷ் ஜெயக்குமார்

Get real time updates directly on you device, subscribe now.

ஹாரர் மற்றும் அடல்ட் காமெடி படங்களை தொடர்ச்சியாக இயக்கி வரும் சந்தோஷ் ஜெயக்குமார் சமீபத்தில் இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கியும் அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாரதிராஜா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்தோஷ் குமாரின் அடுத்த புதிய படத்தின் தலைப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு Mr.வெர்ஜின் என்ற டைட்டிலை சந்தோஷ்குமார் வைத்துள்ளார். முந்தைய படத்தைப் போன்றே இந்தப்படத்திலும் அவரே இயக்கி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் வெளியானதை அடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்தும் கண்டனங்கள் தெரிவித்தும் வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader