IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரனோ வைரஸினால் ஆப்பிள் ஐபோனுக்கு வந்த சோதனை

77

கொரனோ வைரஸினால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரனோ தடுப்பு காரணமாக இந்தியா நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஐபோன் உற்பத்தி நிறுத்தி வைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஐபோன் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

விஸ்ட்ரன் மற்றும் ஃபாக்ஸ்கான் என இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்க வகையில் மத்திய அரசு உத்தரவை அமல்படுத்தும் விதமாக இரு நிறுவனங்களும் ஐபோன் உற்பத்தியை நிறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி பணிகளை விஸ்ட்ரன் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்ட்ரன் நிறுவன பணிகள் எதுவரை நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் XR மற்றும் ஐபோன் SE மாடல்களை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.