IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 நாளை அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

#Appleiphone12 #iphone12launch

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 மாடலை நாளை அறிமுகம் செய்கிறது. உலகம் முழுவதும் ஐபோன் 12 பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் அப்படி எந்த தயாரிப்பும் அறிமுகப்படுத்தவில்லை.

இந்நிலையில் நாளை (அக்டோபர் 13) புதிய தயாரிப்பான ஐபோன் 12 மாடலை அறிமுகம் செய்கிறது. ஹைஸ்பீடு என்ற வாசகத்துடன் கூடிய இந்த அறிமுக விழா அமெரிக்காவில் நாளை நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இந்த போன் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஐபோன் தவிர ஏர் டேக்ஸ் என்ற ப்ளூடூத் ட்ராக்கர், ஹோப் பாடீ என்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர், இயர் ஹெட்போன் போன்றவற்றையும் ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் 12ல் 4 மாடல்கள் இருக்கும் என்கிறார்கள். அதில் ஒவ்வொன்றும் 5.4 இன்ச் முதல் 6.7 இன்ச் வரை அளவில் இருக்கும் எல்லாவற்றிலும் 5ஜி வசதி இருக்கும். ஏ 14 சிப் அதிவேகம் தரும். கேமராவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்குமெண்டெட் ரியாலிட்டிக்காக சென்சார் உள்ளது. இவற்றின் விலை 699 டாலர் முதல் 1099 டாலர் வரை இருக்கலாம்.

இதில் ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை 99 டாலர் வரை இருக்கும். மினி ஹோம் பாட் சைஸ் என்பது தற்போது உள்ள ஸ்பீக்கரில் பாதிதான் இருக்கும். ஏர்டேக் கருவியை மணிபர்ஸ் சாவி என எதில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவை தொலைந்தால் உடனே கண்டுபிடிக்க உதவும். ஆப்பிள் டிவியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் டிவி 4k வசதியுடன் 179 டாலர் விலையில் ஆரம்பிக்கும்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader