IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிஎஸ்6 இணக்க எல்சிவி மாருதி சுசூகி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் இன்று தனது சூப்பர் கேரி வாகனத்தின் பிஎஸ்6 இணக்கமான எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் ‘மிஷன் க்ரீன் மில்லியன்’ திட்டத்துடன் தொடர்புடைய அறிமுகமிது. மாருதி சுசூகி சூப்பர் கேரி வாகனத்தின் வணிகப் பயன்பாட்டைக் குறிக்கும் வகையில் ‘வியாபார மேம்பாட்டுக்கான வலுவான கூட்டாளி’ என்று அழைக்கப்படுவதுடன், பிஎஸ்6 எஞ்சினாக தர மேம்பாட்டு செய்யப்பட்ட முதல் லைட் கமர்ஷியன் வாகனம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாருதி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குனர் (சந்தையியல் & விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவாத்சவா கூறுகையில் ‘320+ வலுவான மாருதி சுசூகி கமர்ஷியன் சேனல் நெட்வொர்க் மூலம் 56,000 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. மினி டிரக் பிரிவு விற்பனையில் சூப்பர் கேரி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. சிறு சரக்கு வாகனப் பிரிவுப் பயனீட்டாளர்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் கேரி சம்மந்தப்பட்ட பிரிவில் அதிக ஆற்றல், மேம்பட்ட வசதி, உயரிய தரம் மற்றும் பன்முகப் பயனுள்ள டெக்கைக் உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகும்.

வணிகங்களின் இலாபத்தை அதிகப்படுத்த சூப்பர் கேரி உதவும் என்பதற்கு இந்த மாடல் அறிமுகமான இரு ஆண்டுகளிலேயே இரண்டாவது அதிக விற்பனையாகும் வாகனம் என்ற சிறப்பைப் பெற்றதே சான்றாகும். பை–ஃப்யூயல் எஸ்–சிஎன்ஜி வேரியண்ட் சிறு கமர்ஷியல் வாகனச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதுடன் சூப்பர் கேரி விற்பனையில் 8% பங்களிப்பை அளிக்கிறது.

பிஎஸ்6 இணக்கமான எஸ்-சிஎன்ஜி வேரியண்டின் அனைவரும் ஏற்கத்தக்க விலை அறிமுகம் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தாராளமாகக் கிடைப்பதில் அரசின் புதுப்பிக்கப்பட்ட கவனம் ஆகியவை சூப்பர் கேரி பிராண்டை இன்னும் வலுப்படுத்தும். என்றார்.

நாட்டின் முதல் 4 சிலிண்டர் ஆற்றல் கொண்ட மினி டிரக் சரக்கு வாகனமான சூப்பர் கேரி 48கேடபிள்யூ@6000ஆர்பிஎம் ஆற்றலையும், 85என்எம்@3000ஆர்பிஎம் டார்க்கையும் வழங்கி அதிர்வுகளற்ற மென்மையான பிக்-அப்-ஐ உறுதிப்படுத்துகிறது. ரிவர்ஸ் பார்க்கிங்க் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், லாக்கபிள் குளோவ் பாக்ஸ், லார்ஜ் லோடிங்க் டெக் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் வசதியான அம்சங்கள் இருக்கின்றன.

மாருதி சுசூகி எஸ்-சிஎன்ஜி வாகனங்களில் ட்யூயல் இண்டர்டிபெண்டண்ட் இசியூ-க்கள் (எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்கள்) மற்றும் இண்டெலிஜெண்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை ஃபேக்ட்ரி ஃபிட்டெட் என்பதுடன், அதிகபட்ச செயல்பாடு, அனைத்து வகைச் சாலைகளிலும் மேம்பட்ட ஓட்டும் வசதி கிடைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader