IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எக்ஸ்ட்ரா ஃபாஸ் வயர்லெஸ் ஹெட் போன்களை வெளியிடும் சோனி

Get real time updates directly on you device, subscribe now.

சோனி இந்தியா தன்னுடைய புதிய உண்மையான வயர்லெஸ் ஹெட்போன்களான WF-XB700 மற்றும் WF-SP800N-ஐ இன்று அறிமுகம் செய்தது. WF-XB700 என்பது ஒரு தொந்தரவற்றகருவி, இசைப்பிரியர்களுக்கு மிகச்சிறந்தது. .Sony-யின் EXTRA BASS™(எக்ஸ்ட்ரா பாஸ்) தொழில்நுட்பத்தைக் கொண்ட WF-XB700 &WF-SP800N ஹெட்போன்கள் இரண்டுமே துல்லியமான, பஞ்சியானலோ-என்டு சத்தத்தையும் தெளிவாகக் கொடுப்பதால், அருமையான கேட்டல் அனுபத்திற்கு உகந்ததாக இருக்கும், குரல் தெளிவைப் பராமரிக்கும்.

நீண்ட பேட்டரி ஆயுடன் WF-XB700 & WF SP800N ஹெட்போன்களின் தடங்கலற்ற இசையை அனுபவிக்கலாம். WF-XB700-க்கு 8 மணிநேர பேட்டரிபேக்கப் உண்டு. கையாளக்கூடிய சார்ஜிங்உறை இருப்பதால் 9 மணிநேரம் சார்ஜ் செய்து 18 மணிநேரம் தடையில்லாமல் இசையைக் கேட்டு மகிழலாம்.

சோனி WF-XB700 மற்றும் WF-SP800N-க்கு தண்ணீர் மற்றும் தூசு புகாதிருப்பதற்காக முறையே IPX4 மற்றும் IP55 ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இப்போது, தண்ணீர்தெளித்தல், வியர்வை மற்றும் தூசு பற்றிக் கவலைப்படாதீர்கள், நீங்கள்செல்லும்போதும், உங்களுடைய உடற்பயிற்சியின் போதும் தாராளமாக இசையைக்கேட்டு மகிழலாம். ஒரு பட்டனை அழுத்தி உங்களுடைய ஸ்மார்ட்போனுடன் இணைக்கலாம்,

உங்களுடைய விர்ச்சுவல் அசிஸ்டன்டின் உதவியோடு உங்களுடைய நாளை நிர்வகிக்கலாம். பில்ட்-இன் மைக் இருப்பதால் WF-XB700 மற்றும் WF-SP800N ஆகிய உண்மையான வயர்லெஸ் ஹெட்போன்களில் உரையாடல் தெளிவாக இருக்கும்.இடது இயர்பட்டில் விரலை வைத்தால் இசையின் ஒலிஅளவு குறையும். WF-SP800N-ல் மிருதுவான குஷன் கொண்ட ஆர்க்சப் போர்ட்டர் உள்ளது.

பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் இருப்பதற்காக முப்பரிமாண வளைந்த வடிவமைப்பு கொண்டதாக உள்ளது. எனவே, நீங்கள் நகரும் போது, ஹெட்போன்கள் காதிலிருந்து நகர்வதில்லை. கச்சிதமான சார்ஜிங்கேஸ் உங்களுடைய உண்மையான வயர்லெஸ் ஹெட்போன்களைப் பாதுகாப்பதோடு, செல்லும் போதும் சார்ஜ் செய்ய உதவுகிறது. கேஸ்-க்கு உட்புறம் மேக்னடிக்ஸ்டிரிப் இருப்பதால், சார்ஜிங்கேஸூக்குள் உண்மையான வயர்லெஸ் ஹெட்போன்களை மீண்டும் வைப்பது சுலபம்.

ஒரு ஸ்நாப் சத்தத்துடன் உள்ளே மூடிக்கொள்ளும். WF-XB700 மற்றும் WF-SP800N உண்மையான வயர்லெஸ் ஹெட்போன்கள் எல்லா Sony சில்லறைக்கடைகளிலும் (Sony சென்டர்மற்றும் Sony எக்ஸ்குளூசிவ்), www.ShopatSC.com தளத்திலும் இந்தியாவில் உள்ளமுக்கிய மின்னணுக்கடைகளிலும், பிற மின்வணிகம் தளங்களிலும் கிடைக்கும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader