IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டெலிகிராம் அப்ளிக்கேஷனில் அட்டகாசமான புதிய அப்டேட் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

உலக அளவில் மிகவும் பிரபலமான வாட்ஸ் ஆப் அப்ளிக்கேஷனுக்கு நிகரான வசதிகளைக் கொண்ட மற்றுமொரு அப்ளிக்கேஷனாக டெலிகிராம் காணப்படுகின்றது. இந்த அப்ளிக்கேஷனில் தற்போது புதிய மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி பயனர்கள் இனி 2GB வரையிலான பைல்களை ஒரே தடவையில் பரிமாறக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ, படங்கள் மற்றும் ஆடியோக்கள் உட்பட மேலும் பல வகையான பைல்களை இவ்வாறு பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்த வசதிகளைப் பெறுவதற்காக டெலிகிராம் 6.3.0 எனும் புதிய பதிப்பினை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஆண்டிராயிட் மற்றும் iOS சாதனங்களில் இப்புதிய பதிப்பினை நிறுவிக் கொள்ள முடியும்.

இதேவேளை இதற்கு முன்னர் 1.5GB வரையிலான கோப்புக்களை மட்டுமே பகிரக்கூடியதாக காணப்பட்டது. அதேபோன்று வாட்ஸ் ஆப்பில் இன்று வரை 16MB வரையிலான கோப்புக்களையே ஒரே தடவையில் அதிகபட்சமாக பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader