IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூகுள் மீட் அப்ளிக்கேஷனில் அட்டகாசமான இரண்டு வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. இருப்பினும் வர்த்தகம் ரீதியாக கடுமையான சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டதால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை முன்னணி நிறுவனங்கள் செயல்படுத்தத் தொடங்கின.

இந்த சூழலில் தான் Zoom, Google Meet, Microsoft Teams போன்ற அப்ளிக்கேஷன்கள் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு பெரிதும் உதவி புரிந்தன. இந்த வகையில் முன்னணியில் இருக்கும் ஜும் அப்ளிக்கேஷனை பின்னுக்கு தள்ளும் வகையில் புதிய வசதிகள் இரண்டினை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது Google Meet அப்ளிக்கேஷனைப் பயன்படுத்தி வீடியோ கான்பரன்சில் ஈடுபடும்போது வினா விடைகளை பரிமாறக்கூடியதாக இருக்கும். அத்துடன் Poll வசதியாகும். அதாவது வாக்கெடுப்புக்கள் நடத்துவதற்கு இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த இரு வசதிகளும் ஏனைய வீடியோ கான்பரன்ஸ் அப்ளிக்கேஷன்களிலும் தரப்படாத நிலையில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்வது பெரும் வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader