IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புது ஸ்டைலுடன் ஓபோ எஃப் 15 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

360

 

புது வருடத்தை ஸ்டைலுடன் தொடங்கிய உலகின் முன்னணி பன்னாட்டு ஸ்மார்ட்ஃபோன் பிராண்டான ஓபோ, தனது சமீபத்திய ஓபோ எஃப் 15 ஸ்மார்ட்ஃபோனை கோவையில் அறிமுகப்படுத்தியது. ஓபோவின் பிரபல எஃப் வரிசையின் சமீபத்திய அறிமுகமான எஃப்15 ஸ்மார்ட்ஃபோன் 7.9 மிமீ மட்டுமே தடிமன் மற்றும் 172 கிராம் எடை கொண்டதுமாகும்.

லேசர் லைட் ரிஃப்ளெக்டிவ் பேக் கவர் அதன் எழிலுக்கு மெருகேற்றி ஸ்டைலை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோனாக விளங்குகிறது. ஓபோ எஃப்15 ஸ்மார்ட்ஃபோனிலுள்ள 48 எம்பி அல்டரா வைட்–ஆங்கிள் மேக்ரோ க்வாட்கேம் செட்-அப் அசத்தல் நிழற்படம் எடுக்கும் அனுபவத்தைத் தரும். லைட்னிங்க் பிளாக் மற்றும் யூனிகார்ன் வொயிட் வண்ணங்களில் வரும் ஓபோ எஃப் 15 பயணத்துக்கு ஏற்ற ஸ்டைலான, அல்ட்ரா போர்ட்டபிள் ஸ்மார்ட்ஃபோன் ஆகும். 2020 ஜனவரி 24 தொடங்கி ரூ 19,990/- விலையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும்.

Related Posts
1 of 2

கடந்த சில ஆண்டுகளாக, புதுமையான பொருள்கள், விரிவான விநியோக வலைப்பணி, ஈடு இணையற்ற விற்பனைக்குப் பின் சேவை ஆகியவை மூலம் ஓபோ தமிழகச் சந்தையில் தனது இடத்தை வலுவாகத் தக்க வைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஓபோ வளர்ச்சி 87.27% ஆகும். 2019 அக்டோபர் முடிய இதன் சந்தைப் பங்கு 15.4% ஆகும். குறிப்பாகக் கோவையில் ஓபோ வளர்ச்சி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 94.32% மற்றும் அதே கால கட்டத்தில் சந்தைப் பங்கு 14.9% ஆகும்.

பிராந்திய விரிவாக்கத்துக்கு ஓபோவின் தொடர் முனைவே அதன் வளர்ச்சிக்குச் சாட்சியாகும். ஏ92020 அறிமுகத்தைத் தொடர்ந்து சமீபத்திய அறிமுகமான எஃப் 15 மூலம் ஓபோ இதை உறுதிப்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் ஓபோ நிறுவனத்துக்கு 23 விற்பனைக்குப் பிந்திய பழுது பார்க்கும் சேவை மையங்கள் உள்ளதால் ஒரு மணி நேரத்துக்குள் பழுது நீக்கிக் கொடுக்கும் உத்தரவாதத்தைத் தருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலைப் பிரிவில் ஊபர் கூல் தொழில்நுட்பப் பொருள்களை வழங்கும் நோக்கத்தை எஃப்15 மூலம் ஓபோ மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

அறிமுகம் குறித்து ஓபோ இந்தியா பொருள் & சந்தைப் பிரிவு துணைத் தலைவர் சுமீத் வாலியா கூறுகையில் ‘மிகச் சிறந்த நுகர்வோர் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க எல்லைகள் தாண்டிச் செல்வதில் ஓபோவுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. வாடிக்கையாளர் விரும்பும் அனைத்து அசத்தல் அம்சங்களையும் வழங்குவதால் எஃப் வரிசை இந்த அணுகுமுறைக்கான சான்றாகும்.

எஃப் வரிசையின் சமீபத்திய அறிமுகமான ஓபோ எஃப் 15 குதூகலம், படைப்புத் திறன், வேகம் ஆகியவற்ருடன் ஈடு இணையற்ற ஸ்டைலான வடிவமைப்பையும் தருகிறது. எழிலும், திறனுடன் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன் இன்றைய இளம் தலைமுறையினரைச் சுண்டி இழுக்குமென நம்புகிறோம்’ என்றார்.