IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஜியோமியின் Mi Outdoor Bluetooth Speaker அறிமுகம்

198

 

ஜியோமி நிறுவனம் இந்தியாவில் புளூடூத் ஸ்பீக்கர்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 5W ஒலி, 20 மணிநேர பேட்டரி மற்றும் குரல் உதவியாளர்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் தற்போது கருப்பு நிறத்தில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. IPX5 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அதாவது சிறிய அளவில் தண்ணீர் பட்டால் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

Mi Outdoor Bluetooth Speaker 5W ஒலி, 20 மணிநேர பேட்டரி மற்றும் குரல் உதவியாளர்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இதை எங்கு வேணாலும் எடுத்து செல்லலாம். Speaker-ல் இருக்கும் 2,000mAh பேட்டரி, 20 மணிநேர மியூசிக் பிளேபேக்கை வழங்கும் என்று ஜியோமி தெரிவித்துள்ளது. சார்ஜ் செய்வதற்கு ஒரு AUX போர்ட் மற்றும் மைக்ரோ-USB போர்ட் உள்ளது மற்றும் இந்த போர்ட்கள் ஒரு அட்டையின் கீழ் மறைக்கப்பட்டுள்ளன.

இது இந்தியாவில் ரூபாய் 1,399க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த Mi Outdoor Bluetooth Speaker ஜியோமியின் Mi.com இணையதளம் மூலமாக விற்பனைக்கு வந்துள்ளது.

 

#Introducing #Giomi’s Mi #Outdoor #Bluetooth #Speaker