23.1 C
Munich
Tuesday, August 9, 2022

ஆபத்தான பாக்ஸிங் விளையாட்டு பற்றிய சுவாரஸ்யமான தகவல்

Must read

பாக்ஸிங் விளையாட்டு எப்படி உருவானது என்பதற்கான சரியான ஆதாரம் யாரிடமும் இல்லை.

ஆனால் பண்டைய கிரேக்கத்தில் வீரர்களின் இறுதிச்சடங்கில் பல வீர விளையாட்டுகளை நடத்துவார்களாம்.

காட்ரோலுக்கஸ் என்ற வீரரின் இறுதிச்சடங்கில் தான் பாக்ஸிங் போன்ற விளையாட்டை முதன் முதலில் விளையாடியுள்ளனர்.

கிமு 3000ம் ஆண்டில் எகிப்தில் பாக்ஸிங் இருந்துள்ளது. அதாவது கையில் துணியை சுத்திக் கொண்டு முகத்தில் குத்தி விளையாடுவார்கள் என்பதை போன்ற புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த விளையாட்டு மிகவும் மோசமான ஒன்றாக இருந்துள்ளது. கிரேக்கத்தில் இரண்டு பேர் தரையில் அமர்ந்து கொண்டு கையில் ரப்பல் பெல்ட்டை சுற்றிக் கொண்டு முகத்தில் குத்தி விளையாடுவார்கள்.

இதில் யாருடைய முகம் கிழிந்து ரத்தம் கொட்ட தரையில் விழுந்து இறக்கிறார்களோ அவர்கள் தோற்றனர் என அர்த்தமாம்.

16ம் நூற்றாண்டு வரை பாக்ஸிங் விளையாட்டு மிகவும் கொடூரமான ஒன்றாகவே இருந்துள்ளது. இதனாலேயே நிறைய பேர் இதனை விளையாட தயங்கி உள்ளனர். இதை விதிமுறைகளுடன் முறைய விளையாடும்படி மாற்றி அமைத்தது பிரிட்டிஷ் நாட்டினர்கள்.

16ம் நூற்றாண்டில் பாக்ஸிங்க்காக லண்டனில் முறைப்படி விதிமுறைகள் அறிமுகப் படுத்தப்பட்டது. அப்பொழுது அது பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டாக மாறிவிட்டது. அதனால் பணக்காரர்கள் நிறைய பேர் இதற்காக பணம் கட்டி விளையாடி வந்துள்ளனர்.

17ம் நூற்றாண்டில் பாக்ஸிங் விளையாட்டு சாமானிய மக்களும் விளையாடுவதற்கான சூழ்நிலைக்கு மாறியது. சின்ன சின்ன போட்டிகள் அனைத்தும் அங்காங்கே நடத்தப்பட்டன. அதன்பிறகு பிரிட்டிஷ்காரர்கள் செல்லும் அனைத்து நாடுகளிலும் பாக்ஸிங் பரவச் செய்தது.

முதன்முதலில் பாக்ஸிங்க்காக பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது ஜாக் புரோட்டன் (Jack Broughton). பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு சிறுவர்களும் இந்த விளையாட்டை சொல்லித் தர கூறியதால் 1758ல் பாக்ஸிங் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.

தற்போது நடைமுறையில் பாக்ஸிங்க்கான விதிமுறைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் நவீன கையுறைகள் அனைத்தும் அறிமுகப்படுத்தியதும் ஜாக் புரோட்டன் தான். அந்த காலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றதால் நல்ல வருமானமும் பெற்றார்.

பாக்ஸிங்கின் அதிகாரப்பூர்வமான பெயர் ப்யூக்கலிசம். அதாவது முஷ்டியை பயன்படுத்தி சண்டை போடும் திறமை என்பதாகும்.

பாக்ஸிங் இரண்டு வகைப்படும். ஒன்று தொழில்முறையிலான குத்துச்சண்டை, மற்றொன்று அமெச்சூர் குத்துச்சண்டை. இதில் அமெச்சூர் பாக்ஸிங்கை 1908ல் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தினர்.

மொத்தம் 3 – 4 சுற்றுகள் மட்டுமே. இதில் தலைக்கவசம் , இடுப்பு கவசம் மற்றும் வயிற்று கவசம் அணிந்து விளையாடுவார்கள்.

அதிக எடையிலான குத்துச்சண்டையில் மொத்தம் 12 சுற்றுகள் இருக்கும். இதில் தலைக்கவசம் கிடையாது. முடிந்தால் முகத்தில் அடிபடாமல் கவனமுடன் விளையாடலாம்.

இதில் தொடர்ந்து 10 வருடங்களாக சாம்பியன் பட்டம் பெற்றவர் லூயிஸ் ஃபேரோ. 1937 முதல் 1949 வரை இவர் சாம்பியனாக இருந்துள்ளார்.

உலகத்திலேயே முதலும் கடைசியுமாக ஒரு கரடிக்கும் மனிதனுக்கும் குத்துச்சண்டை நடந்துள்ளது. 1949ல் க்யூஸ் வால்டாஸ் என்பவருக்கும் கரடிக்கும் பாக்ஸிங் சண்டை வைத்தனர்.

இதில் முதல் சுற்றிலேயே கரடி ஓங்கி ஒரு குத்தியதிலேயே அவர் இறந்துவிட்டார். சாம்பியன் பட்டத்தை கரடி பெற்றது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article