Home கட்டுரை போரடிக்குதா….. அப்படினா… இந்தா! என அசை போட வைக்கும் சுவிங்கம் பற்றிய டக்கரான தகவல்

போரடிக்குதா….. அப்படினா… இந்தா! என அசை போட வைக்கும் சுவிங்கம் பற்றிய டக்கரான தகவல்

0

சுவிங்கம் தற்போதைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை. 5000 வருடங்களுக்கு முன்பே சுவிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தி உள்ளனர். பிரிட்ஜ் மரத்தின் பாலோடு இனிப்பை கலந்து சுவிங்கமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

கிரேக்கத்தில் தான் பல வகையான சுவிங்கமை கண்டுபிடித்து கலக்கியுள்ளனர்.

மாஸ்டிக் மரம் மற்றும் வாசனை திரவியம் கொண்ட மரங்கள், பழங்களின் கூல் எடுத்து அதன் மூலம் சுவிங்கம் தயாரித்து சாப்பிட்டு வந்துள்ளனர். அந்த காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் சுவிங்கம் சாப்பிட்டு செல்ல வேண்டும் என்ற சட்டம் இருந்ததாம்.

18ம் நூற்றாண்டில் அமெரிக்கா – இங்கிலாந்து போன்ற நாடுகளில் மரத்தின் பால் மற்றும் பட்டைகளை வைத்து தான் சுவிங்கம் தயாரித்துள்ளனர்.

அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால் செயற்கை மூறையில் சுவிங்கம் தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1848ம் ஆண்டில் ஜான் பீட் கர்டஸி என்பவர் பாராசீட் வேக்சின் மூலம் செயற்கையான முறையில் சுவிங்கமை தயாரித்தனர்.

அதை 1850ல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆரம்பத்தில் பல்லுக்கு மிகவும் நல்லது என கூறி சுவிங்கமை விற்பனை செய்துள்ளனர்.

1850ல் பல செயற்கை வாசனை பொருட்கள் மற்றும் பவுடர் சர்க்கரைகளை பயன்படுத்தி செயற்கையான முறையில் சுவிங்கமை தயாரித்துள்ளனர்.

அது நன்றாக விற்பனையும் ஆகியுள்ளது. அதனை தயாரித்த வில்லியம் செம்பில் என்பவர் 1868ம் ஆண்டு அதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது.

நீளமான பார் வடிவத்தில் டோலு சுவையில் சுவிங்கம் தயாரித்தனர். 1860ல் ஜான் கோலுக்கன் என்பவர் இதனை தயாரித்து ஒரே இரவில் கோடிஸ்வரன் ஆகியுள்ளார்.

சுவிங்கத்திற்கு ஆரம்பத்தில் பிளிப்பர் பப்பர் என்று தான் பெயர் இருந்துள்ளது. இதற்கு காரணம் வாயில் போட்டு மெல்லும் போது இந்த சத்தம் வந்ததால் அதே பெயரை வைத்துள்ளனர்.

நமது வீட்டில் வெங்காயம் நறுக்கும் போது கண்ணில் நீர் வடியும். அந்த நேரத்தில் சுவிங்கத்தை வாயில் போட்டு மென்றால் கண் எரிச்சல் இருக்காதாம்.

பெரும்பாலான சுவிங்கம் பிங்க் நிறத்தில் இருக்கும். அதற்கு காரணம் இந்த சுவிங்கமை ஆரம்பித்தில் கண்டுபிடித்தவருக்கு பிங்க் நிறம் மிகவும் பிடிக்குமாம்.

அதனால் சுவிங்கத்திலும் பிங்க் நிறம் வர பல முயற்சிகள் எடுத்து அந்த கலரை கொண்டு வந்துள்ளார். காப்புரிமையும் அதே கலரில் வாங்கியதால் பெரும்பாலான சுவிங்கமும் பிங்க் நிறத்தில் உள்ளது.

சுவிங்கமை விழுங்கினால் என்ன ஆகும் என்றால் உடலில் ஒன்றும் ஆகாது. நமது செரிமானத்தில் கொஞ்ச நாள் ஒட்டியிருக்கும்.

உடல் பொறிமுறைகளுக்கு தெரிந்தவுடன் அதனை வெளியே தள்ளிவிடும். அது சுவாச குழாயினுள் மட்டும் மாற்றிக் கொள்ளாதபடி கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுவிங்கமை மெல்லும் போது நமது முகத்தில் உள்ள தசைகள் அனைத்தும் ஒன்றாக செயல்படும்.

அந்த நேரத்தில் நாம் செய்யும் அனைத்து வேலைகளும் கவனம் சிதறாமல் பொறுப்பாக செயல்படுவோம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிகமாக சாப்பிட்டிருக்கும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அந்த நேரத்தில் வாயில் சுவிங்கமை போட்டு மென்றால் அந்த எரிச்சல் சரியாகிவிடுமாம்.

அதே போன்று விமானத்தில் பறக்கும் போது காது அடைக்கும். அந்த நேரத்திலும் சுவிங்கமை மென்றால் அந்த பிரச்சனையும் சரியாகிவிடுமாம்.

Exit mobile version