12.1 C
Munich
Monday, October 3, 2022

வறட்சியையும் குளிர்ச்சியையும் ஒரே நேரத்தில் தரும் ஆச்சரியமான பாலைவன கடல்

Must read

ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் நபீபியா பகுதியில் இந்த நபி பாலைவன கடல் உள்ளது. இதன் பரப்பளவு 899500 ஹெக்டேரில் கரையாக கொண்ட அதிசியம் கொண்ட கடல் ஒன்று உள்ளது.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆறுகள், கடல் மற்றும் காற்று இவை அனைத்தும் சேர்த்து ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பாற் உள்ள மணலை இந்த திசையில் அடித்து வந்துள்ளது. அதில் மிகப்பெரிய பாலைவனம் ஒன்று உருவாகியுள்ளது.

இந்த பாலைவனத்தில் ஆங்காங்கே சிறிய மற்றும் பெரிய அளவு குன்றுகள் காணப்படும். ஆனால் அது பாறைகள் கிடையாது.

அந்த பூமியில் சிறிய வேதி மாற்றங்கள் நடைபெறும்போது காற்று என எல்லாம் சேரும்போது மணல்கள் அனைத்தும் குன்றுகளாக மாறியுள்ளது.

 

கடலோடு பாலைவனமாக இணைந்த நபி பாலைவனம் தான் உலகத்திலேயே மிகவும் வறட்சியான பகுதியாகும்.
அதை பார்க்கும் போது சிறிய செவ்வாய் கிரகம் போன்று காணப்படும். அங்கு மணல் காற்று மற்றும் குன்றுகள் மட்டுமே காணப்படும்.

நபி பாலைவனமும் அதில் இருக்கும் குன்றுகளும் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இயற்கையாக உருவானவை என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.


இதனால் இவை உலகத்தோட மிகவும் பழமையான பாலைவனம் என்ற சாதனையில் இடம் பிடித்துள்ளது.

பகலில் இந்த பாலைவனத்தில் வெப்பநிலை 50 டிகிரி வரை இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் மைனஸ் டிகிரி வரை செல்லுமாம்.

வெயில் காலங்களில் நபி பாலைவனத்தில் காற்றில் கொஞ்சம் கூட ஈரப்பதம் இருக்காது. அதே போன்று பனி காலத்தில் மனிதர்களின் எலும்பே உறையும் அளவிற்கு குளிர் இருக்குமாம்.

எனவே இங்கு மனிதர்கள் வாழ்வது மிகவும் கடினம். இருப்பினும் இங்கு நெருப்பு கோழிகள், எறும்புதிண்ணி மற்றும் சிலவகை பறவைகள் மற்றும் மான்கள் இங்கு வாழ்கின்றன.

நபி பாலைவனத்தில் சில அமானுஷ்யங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களே சொல்கின்றனர். அங்கு ஒரே வடிவம் ஒரே மாதிரியான அளவில் சிலவகை புற்கள் மட்டுமே வளருவதாக சொல்கின்றனர்.

ஆனால் இது எப்படி வந்தது என ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பாலைவனத்தில் பனி படர்ந்து ஆங்காங்கே சிறிய குட்டைகள் உருவாகியிருக்கும். அந்த தண்ணீர் தான் அங்கு வாழும் சிறிய உயிரினங்களுக்கு நீர் ஆதாரமாகும்.

நபி பாலைவனத்தில் சோசுஸ்வெளி என்கிற இடத்தில் மட்டும் அதிசியமாக ஸ்டார் வடிவத்தில் மற்றும் குன்றுகள் உருவாகியிருக்கும்.

இது எப்படியென்றால் நான்கு புறமும் காற்று வீசுவதால் ஸ்டார் வடிவத்தில் உருவாகியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மற்ற பாலைவனங்களை போன்று இல்லாமல் இந்த நபி பாலைவனம் சிவப்பு மற்றும் காவி கலர் கலந்தார் போன்று காணப்படும். அதற்கு காரணம் அங்கு மட்டும் அயன்ஆக்சைடு அதிகமாக உள்ளது.

மழை காலங்களில் மட்டும் சௌஸ்சள்வி (Sossusvlei) எனும் ஆறு இந்த பகுதியின் கடல்பகுதியில் வந்து கலக்கும். அந்த காலத்தில் மட்டும் இதனை பார்ப்பதற்காகவே சுற்றுலா மக்கள் அதிகளவில் வருவார்கள்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article