10.1 C
Munich
Monday, October 3, 2022

ஆச்சரியமும் சுவாரஸ்யமும் கொண்ட ஸ்பெயின் நாட்டின் சிறப்புகள்

Must read

முப்பத்தைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் பூமியின் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தற்போதுள்ள ஸ்பெயின் நாட்டிற்கு வந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் முக்கிய அடையாளமாக கருதப்படும் தக்காளி திருவிழா. அதாவது வருடம் வருடம் தக்காளியால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உற்சாகமாக கொண்டாடிக் கொள்வார்கள்.

ஸ்பெயின் நாட்டில் சக்ராடா பெமிலியா (Sagrada Família) என்ற சர்ச்சை கடந்த 130 ஆண்டுகளாக கட்டிக் கொண்டு வருகின்றார்கள். வருகின்ற 2026ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் பொருளாதார மந்தநிலை வரும்போது ஸ்பெயின் நாட்டிலும் பாதிப்பு ஏற்படும். சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் 27 சதவீதம் மக்களுக்கு வேலைபறிபோனது.

ஸ்பெயின் நாட்டில் பொதுவெளியில் நிர்வாணமாக நின்றாலோ அல்லது நடந்தாலோ குற்றம் கிடையாது. புழுக்கமாக இருந்தால் ஜாலியாக இப்படி நிர்வாணமாக செல்லலாம்.

உலகத்திலேயே மிகவும் பழமையான மற்றும் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வரும் லைட்ஹவுஸ் ஸ்பெயினில் உள்ளது. டவர்ஸ் ஆப் ஹெர்குலிஸ் என அழைக்கப்படும் இந்த லைட்ஹவுஸ் முதல் நூற்றாண்டிலிருந்து தற்போது வரை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் 1900 வருடங்களுக்கு முன்னாடி ரோமானியர்கள் கட்டிய அணைகள் அனைத்தும் இன்றும் வேலைப்பாடுடன் இயங்கி வருகிறது.

முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் யாருடனும் இணையாமல் ஸ்பெயின் நடுநிலைமையுடன் இருந்துள்ளது. இப்படி இருந்தனால் உள்நாட்டிற்குள்ளேயே போர் ஏற்பட்டு ஐந்து லட்சம் பேர் இறந்துள்ளனர்.

உலகத்திலேயே அதிக ஆலிவ் ஆயில் தயாரிக்கும் நாடு என்றால் அது ஸ்பெயின் மட்டுமே. உலகளவில் ஆலிவ் ஆயில் உற்பத்தியில் 43 சதவீதம் ஆலிவ் ஆயிலை ஸ்பெயின் உற்பத்தி செய்கிறது.

ஸ்பெயினில் விலை மாதர்களுக்கு என்று தனி கலரில் டவுசர் அணிந்து கொண்டு இரவு நேரங்களில் நிற்கலாமாம். அதிலிருந்து வரும் பிரதிபலிப்பால் வாகன விபத்தை தடுக்கலாம் என்கின்றனர்.

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலின் பார்டரில் ஒரு ஜிப்லைன் உள்ளது. 750 மீ நீளமுள்ள ஒரு கயிற்றில் தொங்கிக் கொண்டே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்றுவிடலாம்.

ஸ்பெயினில் விலங்குகளை பயன்படுத்தி 16 ஆயிரம் வகையான விளையாட்டுகளை விளையாடுகிறார்களாம். ஒவ்வொரு வருடமும் 60 ஆயிரம் விலங்குகள் இறப்பதாக ஒரு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article