IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அறிவுசார் சொத்துரிமைகள் என்னென்ன ?

Get real time updates directly on you device, subscribe now.

அறிவுசார் சொத்துரிமையில் காப்புரிமை (PATENT), வடிவமைப்பு (DESIGNS), வணிகக் குறியீடு(TRADEMARK)  மற்றும் புவிசார் குறியீடு (GEO IDENTI) எனப்பல வகைகள் உள்ளன. காப்புரிமை, வடிவமைப்பு, வணிகக் குறியீடு மற்றும் புவிசார் குறியீடு ஆகியவை அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வந்தாலும் அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

டிரேட் மார்க்:

தொழிலை நடத்துவோருக்கு டிரேட் மார்க் பெறுவது மிக முக்கியமானதாகும். ஒரு நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு டிரேட் மார்க் அவசியமானதாக கருதப்படுகிறது.

பொருளோ,சேவையோ மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறும் போது அதற்கான முழு உரிமையும் அதன் நிறுவனத்தை சார்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த டிரேட் மார்க். வார்த்தை, லோகோ, லேபிள் என எதுவாக வேண்டுமானாலும் இந்த டிரேட் மார்க் இருக்கலாம்.  உற்பத்தி பொருள், சேவை இவற்றின் பெயர் மற்றும் குறிகளுக்கு பெறுவது டிரேட் மார்க். டிரேட் மார்க் பெறுவதால் நிறுவனருக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். டிரேட் மார்க் பெற்றவரின் பெயரில் வேறு யாராவது தொழில் தொடங்கி னாலோ அல்லது போலியாக பொருளை தயாரித்தாலோ உரிமைமீறல் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெறலாம். மேலும் அந்த நிறுவனத்தின் மீது தடை உத்தரவும் வாங்கலாம். சட்ட வழக்குகளை கையாள டிரேட் மார்க் சான்றிதழ் கைவசம் இருக்க வேண்டும்.

சர்வீஸ் மார்க்:

”டிரேட் மார்க் என்பது பொருட்களுக்கு வழங்கப்படுவது. சர்வீஸ் மார்க் என்பது சேவைத் துறைக்கு வழங்குவது. கலை, ஓவியம், கூரியர், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், அழகு நிலையங்கள், போக்குவரத்து, சாஃப்ட்வேர் பிஸினஸ் (ஆனால், சாஃப்ட்வேர் காப்பி ரைட்டிங் கீழ் வரும்) மற்றும் விளம்பரத் துறைகளுக்கு சர்வீஸ் மார்க் வழங்கப்படுகிறது. சர்வீஸ் மார்க்குக்கு விண்ணப்பித்தவுடன் ஒரு எண்ணும், பிராண்ட் பெயருக்குப் பின்னால் ‘எஸ்.எம்.’ என்று போட்டுக்கொள்ளும் அதிகாரமும் கிடைத்துவிடும். பதிவு செய்யப்பட்டவுடன் ‘ஆர்’ என்றும் போட்டுக்கொள்ளலாம். டிரேட் மார்க்கோ, சர்வீஸ் மார்க்கோ எதுவாக இருந்தாலும் பெயரைப் பயன்படுத்தும்போதெல்லாம் அதையும் சேர்த்தே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு நாம் பதிவு செய்த விஷயம் தெரியும்” என்றார்.

டிஸைன்:

டிஸைன் பேட்டன்ட் ஒரு டிஸைனுக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், வெளிப்புற டிஸைனுக்கு மட்டுமே பேட்டன்ட் வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு கார் மார்க்கெட்டில் வெளிவரப்போகிறது என்றால் அதற்கு முன்பாக அதன் மாடலுக்கு பேட்டன்ட் வாங்கிக்கொள்ளலாம். காருக்கு மட்டுமல்லாமல், ஒரு போன் மாடலுக்குக் கூட, பேட்டன்ட் வாங்கலாம். ஆனால், இந்த பேட்டன்ட் வெளிப்புறத் தோற்றத்துக்கு மட்டும்தான். உள்ளே உள்ள பொருட்களுக்கு, தொழில்நுட்பத்துக்குக் கிடையாது. டிஸைன் பேட்டன்ட் முதலில் 10 வருடங்களுக்குத்தான். மீண்டும் புதுப்பிக்கும்போது இன்னொரு 5 வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். அதன் பிறகு அந்த டிஸைனுக்கு உரிமை கோரமுடியாது.

காப்பிரைட்ஸ்:

கிரியேட்டிவ் வேலைகளுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. நாவல், கவிதை, சாஃப்ட்வேர், இசை, திரைப்படங்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், மற்றும் கலைப்பொருட்கள் போன்றவற்றுக்கு காப்பிரைட்ஸ் வழங்கப்படுகின்றன. படைப்பாளிகள் இருக்கும் காலம் வரையில் மட்டுமல்ல, இறந்த பிறகு 60 ஆண்டுகள் வரையும் வேறு யாரும் அந்தப் படைப்பைப் பயன்படுத்த முடியாது. அதன் பிறகு பொதுமக்களோ அல்லது நிறுவனங்களோ பயன்படுத்தலாம்.

காப்பிரைட்ஸில் வெறும் படைப்புக்கு மட்டுமே உரிமை வழங்கப்படுகிறது. அதை வைத்துக்கொண்டு உருவாக்கும் வேறு பொருட்களுக்கு உரிமை கிடையாது. இங்கு ஐடியாக்களுக்கு உரிமை கிடையாது.

பேட்டன்ட்:

ஒரு பொருளுக்கு பேட்டன்ட் வாங்குவது என்றால் அதற்கென சில அடிப்படைகள் இருக்கவேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே பேட்டன்ட் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், நாம் கண்டுபிடித்ததற்கு ஒரு வழிமுறை இருக்கவேண்டும். ‘இந்த உலோகத்துடன் இந்த அமிலத்தைச் சேர்த்தால் இந்தப் பொருள் கிடைக்கும், அதற்கு இவ்வளவு வெப்பநிலை இருக்கவேண்டும்’ என்று ஒரு வழிமுறையுடன் அந்தப் பொருள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கூடவே மக்களுக்குப் பயன்படும் பொருட்களுக்கு மட்டும்தான் பேட்டன்ட் கிடைக்கும். ஒரு பொருளை உருவாக்கி அதை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் அதற்கு பேட்டன்ட் கிடைக்காது.

அதே போல பேட்டன்ட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான். அதாவது 20 வருடங்களுக்கு மட்டும்தான். அதே தயாரிப்பில் ஆராய்ச்சி செய்து அதில் புதிய விஷயங்களைப் புகுத்தி, மீண்டும் பேட்டன்ட்டை 20 வருடங்களுக்குள் வாங்கிக்கொள்ளவேண்டும்.

உங்கள் அறிவுசார் சொத்துகளை பதிவு செய்து பாதுகாக்க http://bgrow.in/ அணுகலாம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader