இன்ஸ்டாகிராமில் அறிமுகமான Vanish Mode வசதியை பயன்படுத்துவது எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

வாட்ஸ்ஆப்பில் தானாக அழியக்கூடிய குறுஞ்செய்தி வசதியை அறிமுகம் செய்த பின்னர் இதனை இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இன்ஸ்டாகிராமில் தரப்பட்டுள்ள குறித்த வசதியானது Vanish Mode என அழைக்கப்படுகின்றனது.

இந்த வசதி மூலம் அனுப்பப்பட்ட செய்தியானது படிக்கப்பட்ட பின்னர் அது தானாகவே அழிந்துவிடக்கூடியதாக இருக்கின்றது. இப்படி இருக்கையில் குறித்த வசதியினை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை திறந்து சாட் விண்டோவிற்கு செல்லவும். அடுத்து சாட் விண்டோவின் கீழ்ப் பகுதியில் இருந்து மேல் நோக்கி ஸ்வைப் (Swipe) செய்யவும். இப்போது Vanish mode என்பதை ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.

Vanish mode என்பதனை டிஆக்டிவேட் அல்லது Off செய்வதற்கு மீண்டும் கீழிருந்து மேலாக ஸ்வைப் செய்யவும். இவ்வாறு பேஸ்புக் மெசஞ்சரிலும் Vanish mode-னை ஆக்டிவேட், அல்லது டிஆக்டிவேட் செய்ய முடியும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader