10.1 C
Munich
Monday, October 3, 2022

பெண்கள் விரும்பும் லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தது இந்தியர்கள் தான்! தெரியுமா….

Must read

லிப்ஸ்டிக் பயன்பாடு என்பது கிபி 1300ம் ஆண்டிலிருந்தே பயன்படுத்தி வருவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியா, எகிப்து மற்றும் அரேபியா ஆகிய நாடுகளில் ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகின்றனர்.

 

வாய்க்கும் மேக்கப் போடலாம் என்ற விசயத்தை கண்டுபிடித்ததே நம் இந்தியர்கள் தான்.

தற்போது வாழ்ந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மக்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் என்ற விசேஷங்களில் முகம் மற்றும் வாய்ப்பகுதிகளுக்கு இயற்கை முறையிலேயே மேக்கப் போட்டு அழகு பார்த்துள்ளனர்.

 

பழமை காலத்தில் லிப்ஸ்டிக்கை தேன் கூட்டிலிருந்து கிடைக்கும் மெழுகு மற்றும் கலர் கலரா இருக்கும் செடியினை பிழிந்து அதில் கிடைக்கும் சாயத்தை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

 

இந்தியாவில் கண்டுபிடித்த உதட்டு சாயத்தை வணிகத்திற்காக வந்த மற்ற நாட்டினர்கள் அவர்களது நாட்டிற்கும் எடுத்து சென்றுள்ளனர்.

அப்படி சென்ற லிப்ஸ்டிக் கிமு 1500ல் மெசபோட்டோமியா மக்கள் லிப்ஸ்டிக்கை புதுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக தங்கத்தை நுணுக்கி அதை லிப்ஸ்டிக்குடன் சேர்த்து பயன்படுத்தி உள்ளனர்.

 

உதட்டு சாயத்தில் மேலும் புதுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக நினைத்த மக்கள், உதட்டு சாயத்துடன் சேர்த்து வண்ணத்துப்பூச்சி இறக்கையில் உள்ள கலர் மற்றும் மயில் தோகையில் உள்ள கலர் ஆகியவற்றை உதட்டு சாயத்துடன் சேர்த்து பயன்படுத்தியுள்ளனர்.

 

19ம் நூற்றாண்டு வரை லிப்ஸ்டிக் தொழில் குடிசைச் தொழிலாகத்தான் செய்து வந்துள்ளனர்.

அதன்பிறகு 1884ம் ஆண்டு குர்லைன் என்ற கம்பெனி தான் லிப்ஸ்டிக் என்பதை பணக்கார பெண்கள் மட்டுமின்றி பலரும் உபயோகப்படுத்தலாம் எனக்கருதி லிப்ஸ்டிக்கிற்கான பல பிராண்ட்களை தொடங்கி பிரம்மாண்டமான தொழிலாக மாற்றினர்.

உதட்டு சாயம் எகிப்திற்கு சென்றதும் அந்த ஊர் மக்கள் மேலும் புதுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக கள்ளிச் செடியிலிருந்து கிடைக்கும் ஒருவகையான சாயத்தை கலந்து பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் உதடு மினுமினுப்பிற்காக மீனின் செதில்களை நுணுக்கி அதை உதட்டு சாயத்துடன் சேர்த்து பயன்படுத்தி உள்ளனர்.

லிப்ஸ்டிக்கை பயன்படுத்த அரேபியர்கள் விரும்பியுள்ளனர். ஆனால் அதற்கு தேவையான பொருட்கள் கிடைக்காததால் பளபளப்பாக இருக்கும் பாம்புகளை பிடித்து அதன் உடலிருந்து சாயத்தை எடுத்து அதனை உதட்டு சாயமாக பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் பாம்பின் விஷம் சிலருக்கு பக்க விளைவாக உதடுகள் வீங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது பயன்பாட்டில் இருக்கும் திடமான லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர் அபு அல் கஸாம் என்பவர்.

தேன் கூட்டிலிருந்து கிடைக்கும் மெழுகு மற்றும் இயற்கையாக கிடைக்கும் மற்றும் ஆமணக்கு எண்ணெய் செயற்கை நிறம் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளார்.

மாடர்ன் லிப்ஸ்டிக்கை முதன்முதலில் பயன்படுத்திய பிரபலம் யார் என்றால் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த எலிசபெத் ராணியாகும்.

அவருடைய நிறத்திற்கும் அந்த கலருக்கும் மிகவும் அழகாக தோன்றியதால் பணக்கார பெண்கள் பலரும் அதற்கு பிறகு பயன்படுத்தத் தொடங்கினர்.

தற்போது உபயோகப்படுத்தும் திருகினால் லிப்ஸ்டிக் மேலேயும் கீழேயும் செல்லும் மாதிரியான லிப்ஸ்டிக்கை 1923ம் ஆண்டு ஜேம்ஸ் ப்ரூஸ் பேஷன் என்பவர் தான் கண்டுபிடித்துள்ளார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article